Collegium recommends appointment of 8 High Court Chief Justices 5 Transfer Tamil News : 5 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் 17 உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இடமாற்றம் உள்ளிட்டவற்றோடு 8 உயர் நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகளை நியமிக்கவும் உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, செப்டம்பர் 16-ம் தேதி கூடிய இந்தியத் தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான கொலீஜியம், கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டலை அலகாபாத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியாகவும் மற்றும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா கல்கத்தா தலைமை நீதிபதியாகவும் உயர்த்த பரிந்துரைத்தது.
மேலும், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதி நீதியரசர் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆந்திர உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சதீஷ் சந்திர சர்மாவை தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் மற்றும் பாம்பே உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் வி மோரை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமித்தது கொலீஜியம்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அரவிந்த் குமார் குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், இமாச்சலப்பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக ஆர்வி மலிமத் மத்தியப் பிரதேச நீதிபதியாகவும் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
ஆந்திராவிலிருந்து சத்தீஸ்கருக்கு நீதிபதி அரூப்குமார் கோஸ்வாமி, மத்தியப் பிரதேசத்தில் இருந்து இமாச்சலப் பிரதேசத்திற்கு நீதிபதி முகமது ரஃபிக், திரிபுராவிலிருந்து ராஜஸ்தானுக்கு நீதிபதி அகில் குரேஷி, ராஜஸ்தானிலிருந்து திரிபுராவுக்கு நீதிபதி இந்திரஜித் மஹந்தி மற்றும் மேகாலயாவிலிருந்து சிக்கிமிற்கு நீதிபதி பிஸ்வநாத் சோமாடர் ஆகியோர் இடமாற்றம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil