Advertisment

மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் திரிணாமூல் காங்கிரஸ் மாபெரும் போராட்டம்: ரயில் முழுக்க போராட்டக்காரர்களை கொண்டு செல்ல முடிவு

தலைநகர் டெல்லியில் நாளை திரிணாமூல் காங்கிரஸ் மாபெரும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. 2 நாட்கள் நடைபெறும் மாபெரும் போராட்டத்தில் அக்கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

author-image
WebDesk
New Update
போராட்டக்காரர்களை கொண்டு செல்ல முடிவு

போராட்டக்காரர்களை கொண்டு செல்ல முடிவு

தலைநகர் டெல்லியில் நாளை திரிணாமூல் காங்கிரஸ் மாபெரும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. 2 நாட்கள் நடைபெறும் மாபெரும் போராட்டத்தில் அக்கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisment

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள மாநில அரசை செயல்படவிடாமல் தடுப்பதற்கு எதிராகவும், மாநிலத்திற்கு சேர வேண்டிய நிதி வழங்கப்படாமல் இருப்பதிற்கு எதிராகவும் பாஜக அரசு கண்டித்து இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ்யின் தலைமை, டெல்லிக்கு செல்ல ஒரு ரயில் முழுக்க போராட்டக்கார்களுக்கு புக் செய்து கொடுத்துள்ளது. மறைந்த தலைவர் சுபாஷ் சந்திர போஸின் ‘டெல்லி சலோ’ என்ற வாசகத்தை இவர்களும் பயன்படுத்த உள்ளனர். கொல்கத்தாவில் உள்ள நேத்தாஜி ஸ்டேடியத்தில் 3000- முதல் 4000 பேர் இன்று ஒன்று கூடுவார்கள் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். இதைத்தொடர்ந்து ஹவ்ரா ரயில் நிலையத்திலிருந்து போராட்டக்காரர்களுடன் ரயில் புறப்படும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அக்கட்சியை சேர்ந்த ஒருவர் கூறுகையில் “ இந்தியா கூட்டணியை சேர்ந்த மற்ற கட்சிகளை இந்த போராட்டத்திற்கு அழைக்கவில்லை. இதை திரிணாமூல் காங்கிரஸ் தனியாக நடத்த உள்ளது” என்று அவர் கூறினார்.

முதலில் டெல்லியில் உள்ள கிரிஷி பவனை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர். 10 ஆரயிம் பேர் வரை போராட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் காவல்துறையினர் அனுமதி வழங்காததால், அக்கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த போராட்டத்திற்கான காரணங்களை மம்தா பானர்ஜி பலமுறை தெரிவித்துள்ளார். மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த, ரூ. 1.15 லட்சம் கோடி நிதியை இன்னும் மாநில அரசுக்கு வழங்கவில்லை என்றும், மேற்கு வங்கத்தில் பாஜக தேர்தலில் தோல்வியடைந்ததால், மாநிலத்திற்கு தேவையான நிதியை தடுத்து வைத்துள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நிதியை தவறாக பயன்படுத்துவதாக கூறி, மத்திய அரசு  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதியை மேற்கு வங்க மாநிலத்திற்கு, வழங்குவதை 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்திக்கொண்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் தலைமை செயலகத்தில் பணிபுரியும் நப்பண்ணா கூறுகையில் “ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம், மேற்கு வங்கத்தின் ரூ. 7000 கோடி நிதியானது மத்திய அரசிடம் உள்ளது. இதில் ரூ. 2,900 கோடி ஊதியத் தொகையாகும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்” என்று அவர் கூறினார்.

டெல்லி சலோ

மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் பேரணியை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேரணி ராஜ் காட்டில் இருந்து தொடங்கி, ஜந்தர் மந்தருக்கு அடுத்த  நாள் செல்லும் என்று கூறப்படுகிறது.

ஸ்பெயின் நாடுக்கு 12 நாட்கள் அரசு முறைப் பயணமாக மம்தா பானர்ஜி சென்றபோது, காலில் காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவர்கள் அவரை  ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளதால், அவரால் இந்த பேரணியில் பங்கேற்க முடியவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment