Advertisment

மத்திய அரசு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி: கனிமொழி தலைமையில் 31 எம்.பி-க்கள் நியமனம்

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி திட்டத்தில் கிராமங்களை முன்னேற்ற கனிமொழி தலைமையில் 31 எம்.பி-க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Subbulakshmi Jagatheesan, DMK, DMK Deputy General Secretary, Kanimozhi, DMK MP Kanimozhi

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமங்களை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டு முன்னேற்றும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

அந்தவகையில் மத்திய அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி திட்டத்தில் ஒரு குழுவை நியமித்துள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இருஅவைகள் (மக்களவை, மாநிலங்களவை) சேர்ந்தவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் 31 எம்.பிக்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி குழுவில் இடம் பெற்றுள்ள 31 எம்.பிக்கள் பெயர் பட்டியல்.

ராஜ்யசபா எம்.பி-க்கள்

  1. முகமது அப்துல்லா
  2. தினேஷ்சந்திரா ஜெமால்பாய் அனவத்தியா
  3. சாந்தா செத்ரி
  4. தர்மஸ்தலா வீரேந்திர ஹெக்கடே
  5. ஈரான கடாடி
  6. ரஞ்சீத் ரஞ்சன்
  7. நாரம்பாய் ஜே. ரத்வா
  8. ராம் ஷகல்
  9. பாசிஸ்தா நரேன் சிங்
  10. அஜய் பிரதாப் சிங்

லோக்சபா எம்.பி-க்கள்

  1. சிசிர் குமார் அதிகரி
  2. சின்ராஜ்
  3. ராஜ்வீர் திலர்
  4. விஜய் குமார் துபே
  5. சுக்பீர் சிங் ஜான்பூரியா
  6. முகமது ஜாவத்
  7. ரீட்டா ஃபுகுனா ஜோஷி
  8. கனிமொழி கருணாநிதி
  9. நளின் குமார் கடீல்
  10. நரேந்திர குமார்
  11. ஜனார்தன் மிஸ்ரா
  12. ராகவேந்திரா
  13. தலாரி ரங்கய்யா
  14. கீதாபென் வஜேசிங்பாய் ரத்வா
  15. அரவிந்த் கன்பத் சவந்த்
  16. மாலா ராஜ்ய லக்ஷ்மி ஷா
  17. விவேக் நாராயண் ஷெஜ்வால்கர்
  18. பிரிஜ் பூஷன் சரண் சிங்
  19. கும்பக்குடி சுதாகரன்
  20. அலோக் குமார் சுமன்
  21. ஷியாம் சிங் யாதவ். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்தை தத்தெடுத்து வெற்றிகரமாக பணிகளை செய்த வெகு சில எம்.பி-க்களில் கனிமொழியும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வெங்கடேசபுரம் கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி, அங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளில் இருந்து விவசாய குளம் சீரமைத்து கொடுத்தது வரை பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான ரிப்போர்ட்களையும் ஆலோசித்து இந்த பொறுப்பை கனிமொழியிடம் மத்திய அரசு கொடுத்ததாக கூறப்படுகிறது.
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment