காங்கிரஸ் கட்சியின் நம்பர் 1 நன்கொடையாளர் மேகா குழுமத்தின் வெஸ்டர்ன் UP பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் ஆகும், இது தேர்தல் பத்திரங்கள் மூலம் 110 கோடி ரூபாய் பங்களித்தது. இந்த குழுமத்தின் மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் ரூ.529 கோடியுடன் பாஜகவுக்கு அதிக நன்கொடை அளித்துள்ளது.
இது, ரூ. 1,192 கோடி செலவழித்து தேர்தல் பத்திரங்களை வாங்கிய இரண்டாவது பெரிய நிறுவனமாகும்.
ஏப்ரல் 2019 முதல் மொத்தம் ரூ.1,422 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை காங்கிரஸ் மீட்டெடுத்துள்ளது.
இதில், வேதாந்தா லிமிடெட் ரூ.104 கோடியுடன் கட்சியின் இரண்டாவது பெரிய தேர்தல் பத்திர நன்கொடையாளர்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வர்த்தகம் செய்யும் MKJ எண்டர்பிரைசஸ் லிமிடெட் 91.6 கோடியுடன் 3வது இடத்தில் உள்ளது. மதன்லால் & கெவென்டர் குழுமம் என அறியப்படும் இந்த குழுமம், கொல்கத்தாவில் நான்கு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. குழுவின் முக்கிய விளம்பரதாரர் மகேந்திர குமார் ஜலான்.
இதுதவிர யசோதா மருத்துவமனைகள் (ரூ. 64 கோடி); ஏவீஸ் டிரேடிங் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ. 53 கோடி); ‘லாட்டரி கிங்’ சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் (ரூ. 50 கோடி); சாஸ்மல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் (ரூ. 39 கோடி); ரித்விக் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ. 30 கோடி); SEPC பவர் (ரூ. 30 கோடி), தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸுக்கு நன்கொடை அளித்த மற்ற முக்கிய நிறுவனங்கள்.
இதில், ஏவீஸ் டிரேடிங் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சாஸ்மல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட்- கட்சி வலுவாக இல்லாத மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் ஆகும்.
Read in English: Common to Congress, BJP: Group that gave the most via electoral bonds
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“