Advertisment

வகுப்புவாத வன்முறை; மோடி மவுனம் ஏன்? 13 கட்சித் தலைவர்கள் கூட்டாக கேள்வி

13 Opposition leaders speak out against hate speech, communal violence and questioned PM’s ‘silence’ Tamil News: வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது என்றும் குறிப்பிட்டு 13 கட்சித் தலைவர்கள் கூட்டாக கேள்வியெழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
communal violence in india; 13 Oppn leaders questions PM’s ‘silence’

Indian news in tamil: இந்தியாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisment

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரன் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டாக அறிக்கையில், உணவு, உடை , நம்பிக்கை, பண்டிகை மொழியை பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச்னையை தூண்டுகின்றனர்.

நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்பு வாத வன்முறையை கண்டிக்கிறோம். மத ரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து மக்கள் அமைதி காக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதை மீண்டும் உறுதிப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், "நாட்டில் வெறுப்பு பேச்சை தூண்டுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது." என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mk Stalin Pm Modi India Sonia Gandhi Mamata Banerjee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment