கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்ககப்பட்டுள்ளது.
Read In English: Sitaram Yechury is on respiratory support at AIIMS Delhi, his condition critical: CPI(M)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் சீதாரம் யெச்சூரி. 72 வயதான இவர், வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசக்குழாய் தொற்று காரணமாக ஐ.சி.யூவில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சீதாரம் யெச்சூரியின் உடல்லை கவலைக்கிடமாக உள்ளதால், மருத்துவர்கள் தீவிரமாக கண்கானித்து வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 1952-ம் ஆண்டு சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி, 1974-ம் ஆண்டு இந்திய மாணவர் கூட்டமைப்பில் தன்னை இணைந்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1975-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.
2005-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட சீதாராம் யெச்சூரி, 2015-ம் ஆண்டு, சி.பி.ஐ.எம். கட்சியின் 5-வது பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து 2018 மற்றும், 2022 ஆகிய 3 ஆண்டுகளில், தொடர்ந்து 3 முறை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“