கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறிய உழவர்கரை நகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொசு வலையை மூடிக்கொண்டு நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில், கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத உழவர்கரை நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சேது செல்வம் தலைமையில் 50கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொசுவலையை முழுவதுமாக மூடிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்சியாளர்களையும் உழவர்கரை நகராட்சி அதிகாரிகளையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.