ஐ.எஸ் நிர்வாகிக்கு எதிராக கொடுத்த புகார்... என்.ஐ.ஏ விசாரணையில் மாற்றி சாட்சி கூறிய கேரளா நபர்!

எஃப்.ஐ.ஆரில் என்ன எழுதியிருந்தது என்பதை படிக்காமலே கையெழுத்திட்டேன்....

எஃப்.ஐ.ஆரில் என்ன எழுதியிருந்தது என்பதை படிக்காமலே கையெழுத்திட்டேன்....

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Complaint against IRF employee Kerala man declared hostile witness

Complaint against IRF employee Kerala man declared hostile witness

 Sadaf Modak

Advertisment

Complaint against IRF employee Kerala man declared hostile witness : இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேசனைச் சேர்ந்தவர், கேரளாவைச் சேர்ந்த ஆர்ஷி குரேஷி. இவர் தன்னுடைய மகனையும் அவரது குடும்பத்தினரையும் மூளைச் சலவை செய்து தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.-இல் இணைத்துவிட்டதாக கேரளாவைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்தார்.

புகார் அளித்தவரின் மகன், மகனின் மனைவி, அவருடைய 1 வயது பேத்தி, உறவினர், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 2016ம் ஆண்டு யாரிடமும் சொல்லாமல் கேரளாவை விட்டு வெளியேறியுள்ளனர். புகார் அளித்தவர் உம்ராஹ் என்ற புனித யாத்திரையில் இருந்து திரும்பி வந்தவர், தன்னுடைய மகன் அர்ஷி என்பவருடன் பேசியதாக தன்னுடைய முந்தைய புகாரில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது என்னுடைய மகன் எங்கே சென்றான் என்பது எனக்கு தெரியவில்லை. மேலும் எனக்கு ஐ.ஆர்.எஃப் என்றால் என்ன என்றும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் குரேஷி என்பவர் யாரென்றும் எனக்கு தெரியாது என தெரிவித்தார். என் மகன் அலைபேசியில் பேசியதை மட்டும் வைத்துக் கொண்டு அவன் ஐ.எஸ்.ல் இணைந்துவிட்டதாக எங்களால் கூறிவிட இயலாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

To read this article in English

Advertisment
Advertisements

தேசிய புலனாய்வு மையத்தால் 2017ம் ஆண்டு குரேஷி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவர் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்றும் இந்தியாவில் இருந்து ஐ.எஸ். அமைப்பில் இந்தியர்கள் சேர்வதை ஊக்குவித்தது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

என்.ஐ.ஏ நடத்திய இந்த விசாரணையில், 2016ம் ஆண்டு முதன் முதலாக தன் மகன் காணவில்லை என்று பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை காண்பித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது நான் தான் கையெழுத்திட்டேன் என்று ஒப்புக் கொண்டார். ஆனால் அதில் என்ன எழுதியுள்ளது என்பதை நான் படிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இவருடன் விசாரணை அடுத்த வாரமும் தொடரும்.

Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: