scorecardresearch

வாக்குச்சாவடி அருகே ‘ரோடு ஷோ’… மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

பிரதமர் மோடி, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றபோது, ​​ஊர்வலம் நடத்தியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Complaint filed against PM MODI for ‘holding road show’ near polling booth Tamil News
பிரதமர் நரேந்திர மோடி

 PM Modi Tamil News: 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 1-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் வாக்களிக்கச் சென்றபோது, ​​ஊர்வலம் (ரோடு ஷோ) நடத்தியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில காங்கிரஸ் சட்டப் பிரிவு தலைவர் யோகேஷ் ரவானி அளித்த புகாரில், மோடி, பாஜக கொடியை ஏந்தி, காவி உடையணிந்து, ராணிப்பில் உள்ள வாக்குச் சாவடியிலிருந்து 500-600 மீட்டர் தொலைவில் இறங்கி, அங்கு கூடியிருந்த மக்களுடன் நடந்து சென்றார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, யோகேஷ் ரவானி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “பிரதமர் மோடி வாக்குச் சாவடியின் வாயிலில் இருந்தே வெளியேறியிருக்கலாம். ஆனால் அவர் முன்னதாகவே வெளியேறி, நடந்து சென்று வழியில் சிலருடன் பேசினார்,” என்று தெரிவித்தார். மேலும், இந்தச் செயல் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்வதாகவும், வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்களை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மோடி வாக்களிக்க வரும் காட்சிகளை உள்ளூர் மற்றும் தேசிய தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்புவதாகவும், இது வாக்காளர்களை பாதிக்கும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அளித்த நான்கு புகார்களில் மோடிக்கு எதிரான புகார்களும் அடங்கும். சோட்டா உதேபூரில் 400 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட கலோல் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் பிரபாத்சிங் சவுகானுக்கு எதிர்க்கட்சியும் போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளது. தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளது.

வாக்குப்பதிவு நாளில் கட்லோடியா தொகுதியில் தொடர்ந்து காட்டப்படும் முதல்வர் பூபேந்திர படேலின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் மீது மூன்றாவது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள பாபுநகரில் உள்ள சமாஜ்வாதி கட்சி வேட்பாளர், பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்குள் நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Complaint filed against pm modi for holding road show near polling booth tamil news

Best of Express