Computer Baba : மத்திய பிரதேசத்தில் அமைச்சருக்கு நிகரான பதவியை வகிக்கும் சாமியார் கம்ப்யூட்டர் பாபா நர்மதா நதியை சுற்றிப் பார்க்கவும், பராமரிக்கவும் தனி ஹெலிகாப்டர் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா நதியை பார்த்துக்கொள்ளும் நர்மதா நதி அறக்கடளை நிர்வாகி பொறுப்பினை பிரபல சாமியார் கம்ப்யூட்டர் பாபா இன்று ஏற்றுக்கொண்டார். இவரின் உண்மையான பெயர் நம்தோ தாஸ் தியாகி. ஆனால் இவரை கம்ப்யூட்டர் பாபா என்று கூறினால் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு மகாராஷ்ட்ராவில் இவருக்கு ஏகப்பட்ட பக்தர்கள்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கம்ப்யூட்டர் பாபா பங்கு ஏராளம். சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மத்திய பிரதேசத்தை ஆண்டு வந்த பாஜக அரசு இந்த கம்ப்யூட்டர் பாபா உள்பட 5 பேருக்கு மதம்மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் அமைச்சருக்கு நிகரான பொறுப்பு கொடுத்து இருந்தது. கம்ப்யூட்டர் பாபா சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியிலேயே நர்மதா நதியை பாதுகாக்கும் பொறுப்பினை வகித்து வந்தார். பின்னர் சிவராஜ் சிங் சவுகான் தனது பதவியை ராஜினமா செய்து விட்டு பின்பு, கம்ப்யூட்டர் பாபா காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பணிகளை பார்க்க களத்தில் இறங்கினார்.
பிரபல சாமியார் வேட்பாளர் பிரக்யா சிங்குக்கு எதிராக கம்ப்யூட்டர் பாபா செய்த பிரச்சாரங்கள் மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்தனர். இருந்த போதும் போபாலில் பிரக்யா வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது ம.பியில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு கம்ப்யூட்டர் பாபாவுக்கு நர்மதா அறக்கட்டளை தலைமை நிர்வாகி பொறுப்பை அளித்துள்ளது. இந்த பதவியை இன்று முறைப்படி ஏற்றுக் கொண்ட பாபா நர்மதா நதியை சுற்றி பார்க்க தனி ஹெலிகாப்டர் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார். கம்ப்யூட்டர் பாபாபுக்கு கீழ் பணியாற்ற 17 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுக் குறித்து செய்தியாளர்களிடம் பேசி கம்ப்யூட்டர் பாபா.. “ நர்மதா நதியை வானத்தில் இருந்து சுற்றிபார்த்து ஆய்வு செய்தற்காக மத்திய பிரதேச அரசு எனக்கு ஹெலிகாப்டர் வழங்க வேண்டும். இதன் மூலம் நர்மதா நதியை ஒட்டி உள்ள மரங்களின் நிலை குறித்து அறிய முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.