Advertisment

அரசு திருமண நிகழ்வில் வழங்கிய பரிசுப் பெட்டியில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்; மத்திய பிரதேச சர்ச்சை

அரசு சார்பில் 296 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமண நிகழ்வில், மணமக்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பெட்டியில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்; மத்திய பிரதேசத்தில் சர்ச்சை

author-image
WebDesk
New Update
condom

மத்திய பிரதேசத்தில் அரசு ஏற்பாடு செய்த திருமண நிகழ்வில் மணமக்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பெட்டியில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் இருந்ததால் சர்ச்சை

Anand Mohan J 

Advertisment

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான அரசாங்கத்தின் திருமணத் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் நடைபெற்ற வெகுஜன திருமண நிகழ்வில், 200-க்கும் மேற்பட்ட புதுமணத் தம்பதிகளுக்கு ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் அடங்கிய மேக்கப் பெட்டிகள் பரிசாக வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் முக்யமந்திரி கன்யா விவா/நிக்கா யோஜனா திட்டத்தின் கீழ் 296 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்ற தண்ட்லாவில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்: ஐ.டி விசாரணை வளையத்தில் 2 வெளிநாட்டு நிறுவனங்கள்; ஹிண்டன்பர்க்கின் அதானி அறிக்கையில் உள்ளவை

குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுகாதார அதிகாரிகள் ஆணுறைகள் மற்றும் கருத்தடை சாதனங்களை விநியோகித்ததாகக் கூறி, மாநில சுகாதாரத் துறையை மூத்த மாவட்ட அதிகாரி புர்சிங் ராவத் குற்றம் சாட்டினார்.

“ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் விநியோகம் செய்ததற்கு நாங்கள் பொறுப்பல்ல. முக்யமந்திரி கன்யா விவாஹத்தில் அத்தகைய கிட் வழங்குவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. இனி வரும் காலங்களில் இது குறித்து ஆய்வு செய்து, வெகுஜன திருமண நிகழ்ச்சியில் ஆணுறை விநியோகம் செய்யாமல், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யுமாறு உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். இது குறைந்த எழுத்தறிவு விகிதத்தைக் கொண்ட பழங்குடியினப் பகுதி. மக்களிடம் அறிவியல் மனப்பான்மை அதிகம் இல்லை, எனவே இதை வைத்து மீண்டும் இது நடக்காமல் பார்த்துக் கொள்வோம்” என்று புர்சிங் ராவத் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

மாவட்ட குடும்ப நல அலுவலர் டாக்டர் அசோக் படேல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது: “நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது. ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட புதுமணத் தம்பதிகளைப் பார்த்தோம், அவர்களிடம் விழிப்புணர்வைக் கொண்டுச் செல்லலாம் என்று நினைத்தோம். எங்களிடம் 200 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் இருந்தனர், அவர்கள் கிட் குறித்து அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தனர். ஆனால் சிலரால் புரிந்து கொள்ள முடியவில்லை... இது வரதட்சணையின் ஒரு பகுதி என்று நினைக்கும் தம்பதிகள் இருந்தனர்... இவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து இந்த கருவிகளை விநியோகிக்க எங்களுக்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்,” என்று அந்த அதிகாரி கூறினார். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு ‘நை பஹல்’ கிட் உள்ளூர் ஆஷா பணியாளர்களால் வழங்கப்படுகிறது.

குடும்பக் கட்டுப்பாட்டுக்கான சிறந்த நடைமுறைகளை வழங்குவதே இந்த கருவியின் நோக்கமாகும், "தற்காலிக குடும்பக் கட்டுப்பாடு முறையைப் பயன்படுத்தி திருமணத்திற்குப் பிறகு முதல் குழந்தை பிறந்த பிறகு ஒரு இடைவெளியை (2 ஆண்டுகள் வரை) வைத்திருக்க புதிதாக திருமணமானவர்களை ஊக்குவிப்பது" இதன் நோக்கமாகும், மேலும் கடந்த ஓராண்டாக உள்ளூர் சுகாதாரத்துறை மூலம் விநியோகிக்கப்படுகிறது.

இந்த கருவியில் இரண்டு மாத மதிப்புள்ள ஆணுறைகள், தினசரி மற்றும் வாராந்திர கருத்தடை மாத்திரைகள், பரிசுப் பெட்டியில் பேக் செய்யப்பட்ட இரண்டு கர்ப்பக் கருவிகள் உள்ளன. இவற்றுடன், ஒரு கண்ணாடி, இரண்டு பொட்டு பாக்கெட்டுகள், இரண்டு துண்டுகள் மற்றும் இரண்டு கைக்குட்டைகளையும் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதற்காக மத்தியப் பிரதேச அரசு ஏப்ரல் 2006 இல் முக்யமந்திரி கன்யா விவா/நிக்கா யோஜனாவைத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் மணமகளின் குடும்பத்திற்கு அரசு 55,000 ரூபாய் வழங்குகிறது. கடந்த மாதம், திண்டோரியின் கட்சராய் பகுதியில் நடந்த வெகுஜன திருமண நிகழ்வில் சில மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்ய வைக்கப்பட்டதால், இந்தத் திட்டம் விமர்சனத்திற்கு உள்ளானது.

“நை பஹல்” கிட் விநியோகத்தைத் தொடர்ந்து, முதல்வர் சவுகானை குறிவைத்து காங்கிரஸ் தாக்கியது. “பா.ஜ.க தலைவர்கள் தங்கள் மகள்களுக்கு திருமணத்திற்குப் பிறகு என்ன பரிசளித்தார்கள் என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவார்களா? பழங்குடியின மக்கள் என்று வரும்போது மட்டும் பகிரங்கமாக இதற்கு ஆளாக்கப்படுவது ஏன்? அவர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை இல்லையா? கடந்த காலங்களிலும், இந்த பிராந்தியத்தில் மாவட்ட நிர்வாகத்தால் வெகுஜன கர்ப்ப பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, ”என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பியூஷ் பாபேலே கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Madhya Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment