Advertisment

கர்நாடக பத்திரிக்கையாளர்களுக்கு பா.ஜ.க அரசு தீபாவளி ரொக்கப் பரிசு வழங்கியதாக புகார்; விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை

கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, “முதலமைச்சர் அலுவலகம் (CMO) பத்திரிகையாளர்களுக்கு ‘ஸ்வீட் பாக்ஸ் லஞ்சம்’ என்று கூறப்படுவது குறித்து நீதி விசாரணை கோரியது.

author-image
WebDesk
New Update
கர்நாடக பத்திரிக்கையாளர்களுக்கு பா.ஜ.க அரசு தீபாவளி ரொக்கப் பரிசு வழங்கியதாக புகார்; விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தீபாவளியன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகளை அனுப்பியதன் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ், ஊழல் வழக்குப் பதிவுசெய்ய வலியுறுத்தியதுடன், முதல்வரை ராஜினாமா செய்யக் கோரியது.

Advertisment

கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, “முதலமைச்சர் அலுவலகம் (CMO) பத்திரிகையாளர்களுக்கு ‘ஸ்வீட் பாக்ஸ் லஞ்சம்’ என்று கூறப்படுவது குறித்து நீதி விசாரணை கோரியது.

இதையும் படியுங்கள்: வீடு வழங்கிய அரசு; மேடையிலே எமோஷ்னல் ஆன பீகாரின் ஏழை எம்.எல்.ஏ

பத்திரிக்கையாளர்களுக்கு "பணம்" கொடுக்கப்பட்டது தனக்குத் தெரியாது என்று பசவராஜ் பொம்மை கூறியதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, “பசவராஜ் பொம்மை அரசின் லஞ்சம் இப்போது அப்பட்டமாக வெளிவந்துள்ளது, இந்த முறை பொறுப்பு முதல்வரின் வீட்டு வாசலில் உள்ளது” என்று கூறினார். மேலும், “இந்த முறை, திரு பசவராஜ் பொம்மை, கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் 1 லட்சம் ரொக்கத்தை அனுப்புவதன் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சகோதரத்துவத்திற்கும் லஞ்சம் கொடுக்க ரகசியமாகவும், வெளிப்படையாகவும், சதித்திட்டமாகவும் முயன்றார். லஞ்சத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்திய எங்கள் பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கு ஹாட்ஸ் ஆஃப்” என்று மாநிலத்தில் கட்சியின் விவகாரங்களைக் கவனித்து வரும் சுர்ஜேவாலா கூறினார்.

40 சதவீத ஊழல் நிறைந்த பசவராஜ் பொம்மை அரசு இப்படிச் செய்ய முயற்சிப்பது இது முதல் முறையல்ல என்று சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.

கர்நாடக மக்கள் தொடங்கியுள்ள “PayCM” பிரச்சாரத்தால் கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க அரசு பிரபலமடைந்துள்ளது என்று சுர்ஜேவாலா கூறினார்.

மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில், ஆட்சேர்ப்பு, பணியிடங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் லஞ்சம் நடந்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

“ஊழல்களில் சமீபத்திய நிகழ்வு, முதல்வர் பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தது. பணம் எங்கிருந்து வந்தது? இந்த ரூ.1 லட்சம் பணம் தீபாவளியன்று பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்காக பொதுக் கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்டதா அல்லது உங்கள் சொந்த நிதியில் இருந்து வந்ததா” என்று சுர்ஜேவாலா கேட்டார்.

முதல்வர் லஞ்சத்தில் ஈடுபட்டால், மாநிலத்தை யார் காப்பார்கள் என சுர்ஜேவாலா கேள்வி எழுப்பினார்.

“பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் முதல்வர் பசவராஜ் பொம்மை. லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பசவராஜ் பொம்மை உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று சுர்ஜேவாலா கூறினார்.

முன்னதாக, சுர்ஜேவாலா ஒரு ட்வீட்டில், “40 சதவீத ஊழல் சர்க்கார் பத்திரிகையாளர்களுக்கு 1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயல்கிறது!

திரு.பசவராஜ் பொம்மை பதிலளிப்பாரா- 1. முதல்வர் வழங்குவது "லஞ்சம்" இல்லையா?

2. 1,00,000 எங்கிருந்து வந்தது? பொது கருவூலத்தில் இருந்து வந்ததா அல்லது முதல்வரிடமிருந்தா?

3. அமலாக்கத்துறை/ வருமான வரித்துறை கவனிக்குமா?" லஞ்சமாக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, எவ்வளவு பெறப்பட்டது, எவ்வளவு திருப்பிக் கொடுக்கப்பட்டது என்பதை மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Karnataka Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment