scorecardresearch

வெற்றிகரமாக முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை: எதிர்க் கட்சிகளால் ஏமாற்றம் அடைந்த காங்கிரஸ்

பாரத் ஜோடோ யாத்திரையில் 8 எதிர்கட்சிகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றிகரமாக முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை: எதிர்க் கட்சிகளால் ஏமாற்றம் அடைந்த காங்கிரஸ்

பாரத் ஜோடோ யாத்திரையில் 8 எதிர்கட்சிகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் ஆம் தேதி தொங்கிய காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைப் பயணம் 150 நாட்களுக்கு பிறகு நேற்று ஜம்மு காஷ்மிரில் நிறைவடைந்தது.

இந்த யாத்திரை  தொடங்கும்போது, பல விமர்சனங்கள் எழுந்தது. மேலும் இந்த யாத்திரையை முழுவதும் நிறைவு செய்ய இயலாது என்று கூறப்பட்டது. ஆனால் எல்லா விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவில் ராகுல் காந்தி இந்த யாத்திரையை நிறைவு செய்துள்ளார். வழியெங்கும் அவருக்கு மக்களின் ஆதரவு கிடைத்தது.

ஆனால் அரசியல் வெற்றிக்கு  எதிர்கட்சியின் ஆதரவும் தேவை என்பாதால், யாத்திரையின்  இறுதி நிகழ்வில் பங்கேற்குமாறு  23 எதிர்கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதினார்.

ஆனால் இதில் 8 எதிர்கட்சிகள் மட்டுமே கலந்துகொண்டன. மேலும் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த ஜே.டி. யு மற்றும் ஆர்.ஜே.டி இரு கட்சிகளுமே யாத்திரையில் பங்கேற்கவில்லை. மேலும் ஸ்ரீநகரில் நடந்த இறுதி நிகழ்விலும் பங்கேற்கவில்லை.

ஆனால் என்.சி.பி,  சிவசேனா, ஜே.எம்.எம் மற்றும் திமுக உள்ளிட்ட  கட்சிகள் பல்வேறு இடங்களில் இந்த யாத்திரையில் பங்கேற்றனர். ஆதித்யா தாக்கரே, சுப்ரியா சுலே ஆகிய இருவரும், மகாராஷ்டிராவில் யாத்திரை வந்தபோது அங்கே கலந்துகொண்டனர். சஞ்சய் ராவத் ஜம்முவில் இணைந்தார்.

ஸ்ரீநகரில் கடும் பனிப் பொழிவு காணப்பட்ட போதும், திமுக திருச்சி சிவா, சிபிஐ சார்பாக டி ராஜா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, என். கே  பிரேமச்சந்திரன் மற்றும் விசிகவை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும் கலந்துகொண்டர் எதிர்கட்சிகள், ராகுல்காந்தியை மக்கள் ஒரு நம்பிக்கையாக பார்க்கிறார்கள் என்றும் பிரித்தாழும் சக்தியிலிருந்து அவர் இந்தியாவை காப்பாற்றுவார் என்று நம்புவதாக பேசினர். 

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Cong expectations take a hit only eight of 23 invited parties turn up to mark end of rahuls yatra