சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முதலமைச்சர் பூபேஷ் பாகல் உள்பட கட்சி மூத்த தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அதோடு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி குறித்தும் பேசப்பட்டது. மாநாட்டின் கடைசி நாளான நேற்று (சனிக்கிழமை) மாநிலக் கட்சிகளுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியது. ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், பா.ஜ.கவை எதிர்கொள்வதற்கும் அவர்களுடன் சாத்தியமான மாற்றை உருவாக்குவதற்கும் காங்கிரஸ் விருப்பம் தெரிவித்தது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி பற்றியும் பேசியது.
காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்குவதில் ஆர்வமுள்ள கட்சிகளுக்கு அனுப்பிய செய்தியில், எந்தவொரு 3-வது அணியும் உருவாவதும் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று கூறியது. பா.ஜ,க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எதிர்கொள்வதற்கு தற்போது அவசர தேவை என்று தீர்மானம் நிறைவேற்றியது.
“தற்போதுள்ள கடினமான சூழ்நிலையில், நாட்டிற்கு திறமையான மற்றும் தீர்க்கமான தலைமையை வழங்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ்” என்று கார்கே தனது உரையின் தொடக்கத்தில் கூறினார். “2004 முதல் 2014 வரை, ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் எங்கள் கூட்டணி மக்களுக்கு திறம்பட சேவை செய்தது, மக்கள் விரோத, ஜனநாயக விரோத பாஜக அரசை தோற்கடிக்க, ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் இணைந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறினார்.
கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தில், “ மதச்சார்பற்ற மற்றும் சோசலிச சக்திகளின் ஒற்றுமையே காங்கிரஸின் எதிர்கால அடையாளமாக இருக்கும். ஒரே எண்ணம் கொண்ட மதச்சார்பற்ற சக்திகளை அடையாளம் காணவும், அணிதிரட்டவும் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமது சித்தாந்தத்துடன் உடன்படும் மதச்சார்பற்ற மாநிலக் கட்சிகளை சேர்க்க வேண்டும். பொதுவான கருத்தியல் அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அவசரத் தேவை உள்ளது.
அதில், “எந்தவொரு மூன்றாம் அணி உருவாக்கமும் BJP/NDA க்கு சாதகமாக அமையும்” என்று கூறியது. சில எதிர்க்கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி மற்றும் கே.சி.ஆரின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆகியவை
பாஜக-விற்கு எதிரான குழுவிற்கு காங்கிரஸ் தலைமை தாங்கும் யோசனையுடன் ஒத்துப்போகவில்லை. பிஆர்எஸ் ஏற்கனவே மூன்றாவது அணி திட்டத்தை முன்வைத்துள்ளது.
ஆனால் NCP, DMK மற்றும் JD(U) போன்ற பல கட்சிகள் காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணியை உருவாக்க முடியாது என்று நம்புகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/