கர்நாடகாவில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் இரு துருவங்களான காங்கிரஸ் மற்றும் பிஜேபியின் நிலைகளை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தான் இத்தனை பரபரப்பிற்கும் காரணம். 104 இடங்களை பிடித்த பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க திணறியது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்த காங்கிரஸ் 78 இடங்களை பிடித்திருந்த நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியியுடன் கூட்டணி சேர விரும்பியது.
இந்த நிலையில் தான், டியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பிற்கு காத்துக் கொண்டிருந்த எடியூரப்ப இன்று காலை பதவியேற்றார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்பதை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் சித்தராமையா தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் எடியூரப்பா முதல்வர் ஆவதை தடை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது . இதன் எதிரொலியாக நாடு முழுதும் இரு வெவ்வேறான சூழ்நிலை நிலவி வருகிறது. ஒருபக்கம் பாஜக தொண்டர்கள் இனிப்புக்கள் வழங்கியும், பட்டாசுக்கள் வெடித்தும் எடியூரப்பா முதல்வர் ஆகியவை கொண்டாடி வருகின்றனர். மறுபுறம் கர்நாடக முன்னாள் முதல்வர், காங்கிரஸ் ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
,
சித்தராமையாவுடன், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மஜத தொண்டர்களும் முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
,
,