Advertisment

வருமானவரி தீர்ப்பாயத்தில் முறையீடு: முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கி கணக்குகள் விடுவிப்பு

வருமானவரி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்ததை அடுத்து, முடக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் தற்காலிகமாக இயக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Maken

“நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியின் அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன, நமது நாட்டின் ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது” என்று அஜய் மாக்கென் கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக, வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் தற்காலிகமாக இயக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘All our bank accounts frozen weeks before Lok Sabha polls’, says Congress 

மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை கூறியது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கென், “நாங்கள் வழங்கும் காசோலைகளை வங்கிகள் மதிப்பதில்லை” என்று கூறினார்.

“மேலும் விசாரித்ததில், இளைஞர் காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது எங்களுக்குத் தெரியவந்தது. காங்கிரஸ் கட்சியின் கணக்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.” என்று மாக்கென் கூறினார்.

மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு எங்களுடைய வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய அரசைத் தாக்கிப் பேசிய மாக்கென்,  “இது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம்” என்று கூறினார். “இந்தியாவில் ஜனநாயகம் முற்றிலுமாக முடிந்துவிட்டது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன, நமது நாட்டின் ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

நீதித்துறை அதன் கடமையைச் செய்ய வலியுறுத்தல்

மூத்த காங்கிரஸ் தலைவர், இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட்டு ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

“இப்போது எங்களிடம் செலவு செய்வதற்கு, மின் கட்டணம் செலுத்த, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை. எல்லாமே பாதிக்கப்படும், நியாய யாத்திரை மட்டுமல்ல, அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படும்” என்று மாக்கென் கூறினார்.

காங்கிரஸ் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும்

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி வீதிகளில் இறங்கி ஒரு பரவலான போராட்டத்தை ஏற்பாடு செய்யும் என்று காங்கிரஸ் தலைவர் மாக்கென் அறிவித்தார்.

அநாமதேய அரசியல் நிதியுதவிக்கான நரேந்திர மோடி அரசாங்கத்தின் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த ஒரு நாளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கெனின் இந்த செய்தியாளர் சந்திப்பு வந்துள்ளது.  “ஒரு அரசியல் கட்சிக்கு நிதியுதவி செய்வது பற்றிய தகவல்கள் வாக்காளர்கள் வாக்களிக்கும் சுதந்திரத்தை திறம்பட பயன்படுத்துவதற்கு அவசியம்” என்று முன்னிலைப்படுத்திய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த திட்டத்தை செயல்படுத்த சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள்  ‘அரசியலமைப்புக்கு எதிரானது’ என்று கூறியது.

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக, வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் தற்காலிகமாக இயக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட தொடங்கியுல்ளனர்.  இந்த இடைக்கால உத்தரவு மீதான விசாரணை வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது.

2018-ல் வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment