வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த பணிகளை காங்கிரஸ் முன்கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் அதீத கவனம் செலுத்துகிறது. அதன் காரணமாக இன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் ஏஐசிசி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த வார தொடக்கத்தில், கட்சியின் வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்று அறிவித்தார். அதன்படி, காங்கிரஸ் கட்சி பல பெண்களின் பெயர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தி பயன்பாடு அதிகரிப்பு
2019 - 2020 க்கு இடையில் இந்தி பயன்பாடு நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. நாடாளுமன்ற பொதுச்செயலாளர் பிபிகே ராமச்சார்யுலுவின் மதிப்பாய்வின்படி, செயலகத்தின் விண்ணப்பங்கள் மற்றும் பிரதிநிதித்துவங்களுக்கு இந்தியில் பதில் அளிப்பது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியில் டெண்டர் அறிவிப்புகள் வெளியாகுவது முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
இந்தி வளர்ச்சிக்கு காரணமாக கருதப்படும் எம் வெங்கையா நாயுடு, இணை செயலாளர் இருவரும் இந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அதில் நாயுடு, எம்.பி.க்கள் சபை நடவடிக்கைகளிலும், அலுவல் பணியிலும் இந்திய மொழியை பயன்படுத்த வலியுறுத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுப்பிக்கும் பணியில் சாஸ்திரி பவன்
பல அமைச்சகங்கள் மற்றும் துறைகளைக் கொண்ட சாஸ்திரி பவனை, புதுப்பிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இட நெருக்கடி காரணமாக ஒவ்வொரு முறையும் அமைச்சகங்கள் விரிவாக்கம் செய்கையில், புதிய அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது, மத்திய கல்வித்துறைக்கு புதிதாக இணைக்கப்பட்ட இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் அலுவலகத்தை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் சுவரில் பொருத்தப்பட்ட மின்விசிறி தீப்பிடித்து எரிந்துள்ளது.உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil