Advertisment

கர்நாடகாவில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில்… அதிக இடங்கள் பெற்ற காங்கிரஸ்

கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள், இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுடன் முரண்படுகின்றன.

author-image
WebDesk
New Update
Karnataka, Karnataka elections 2023, Karnataka polls 2023, கர்நாடகா, காங்கிரஸ், கர்நாடகா தேர்தல் 2023, பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள், Congress, Congress karnataka, women voters, karnataka voters

கர்நாடகாவில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில்... அதிக வாக்குகள் பெற்ற காங்கிரஸ்

கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள், இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுடன் முரண்படுகின்றன. 2018-ம் ஆண்டில், இந்த தொகுதிகளில் பா.ஜ.க அதிகபட்சமாக - 29 இடங்களை வென்றது. காங்கிரஸ் 14 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம், 9 இடங்களையும் வென்றன.

Advertisment

கர்நாடகாவில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருந்த 52 சட்டமன்றத் தொகுதிகளில், காங்கிரஸ் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. பெண் வாக்களார்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை வென்றது. அதே நேரத்தில், காங்கிரஸின் போட்டி கட்சிகளான பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 2018-ம் ஆண்டு தேர்தலில் அவற்றின் செயல்திறனுடன் ஒப்பிடுகையில் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.

2023 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பகுப்பாய்வு, இந்த 52 தொகுதிகள் மாநிலம் முழுவதும் பரவியுள்ளன - தெற்கு கர்நாடகா (19 இடங்கள்), கடலோர கர்நாடகா (16 இடங்கள்), மத்திய கர்நாடகா (7 இடங்கள்), பெங்களூரு-நகர்ப்புறம் (6 இடங்கள்) மற்றும் ஹைதராபாத் கர்நாடகா (4 இடங்கள்). இந்த இடங்களில் வாக்காளர்களின் முழுமையான எண்ணிக்கையின் அடிப்படையில் ஆண்களைவிட அதிகமாக பெண்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர்.

இந்த 52 இடங்களில் அதிகபட்சமாக காங்கிரசுக்கு 28 இடங்களும், பா.ஜ.க-வுக்கு 18 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 5 இடங்களும் சர்வோதயா கர்நாடகா பக்ஷாவுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.

கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுடன் முரண்படுகின்றன. 2018-ம் ஆண்டில், இந்த தொகுதிகளில் பா.ஜ.க அதிகபட்சமாக - 29 இடங்களை வென்றது. காங்கிரஸ் 14 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 9 இடங்களையும் பெற்றன.

காங்கிரஸ் வெற்றி பெற்ற 28 இடங்களில் அதிகபட்சமாக தெற்கு கர்நாடகாவில் 13 இடங்களும், கடலோர மாவட்டங்களில் 6 இடங்களும், மத்திய கர்நாடகாவில் 4 இடங்களும், ஹைதராபாத் கர்நாடகாவில் 3 இடங்களும், பெங்களூரு - நகர்ப்புறத்தில் 2 இடங்களும் கிடைத்துள்ளன. பா.ஜ.க வெற்றி பெற்ற 18 இடங்களில் கடலோரப் பகுதியிலும், பெங்களூரு-நகர்ப்புறப் பகுதியிலும் 4 இடங்களிலும் மத்திய கர்நாடகாவில் 3 இடங்களிலும் தெற்கு கர்நாடகாவில் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்ற 5 இடங்களில் தெற்கு கர்நாடகாவில் 4 இடங்களும் ஹைதராபாத் கர்நாடகாவில் 1 இடமும் கிடைத்துள்ளன.

மொத்தத்தில், உடுப்பி மாவட்டத்தில் உள்ள பைந்தூர் தொகுதியில், மாநிலம் முழுவதும் பெண் மற்றும் ஆண் வாக்குப்பதிவுக்கு இடையே அதிக அளவில் வித்தியாசத்துடன் பதிவாகியுள்ளது. இந்த பைந்தூர் தொகுதியில் 97,961 பெண் வாக்காளர்களும் 85,517 ஆண்கம் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட 12,444 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். பைந்தூர் தொகுதியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த குருராஜ் ஷெட்டி காந்திஹோல், காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபால் பூஜாரியை 16,153 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த 52 தொகுதிகள்: பண்ட்வால், பெல்லாரி, பெல்லாரி சிட்டி, பெல்தங்கடி, பத்ராவதி, பட்கல், பைந்தூர், சாமராஜா, சாமராஜநகர், சன்னபட்னா, சிக்கபள்ளாப்பூர், சிக்மகளூர், சித்ரதுர்கா, தவணகெரே வடக்கு, குண்ட்லுப்பேட்டை, குர்மித்கல், ஹோசகோட், கனகபுரா, கபு, கார்கல், கார்வார், கிருஷ்ணராஜா, கிருஷ்ணராஜ்பேட்டை, குந்தபுரா, மடூர், மடிகேரி, மகாலட்சுமி லேஅவுட், மல்லேஸ்வரம், மாண்டியா, மங்களூரு, மங்களூரு சிட்டி வடக்கு, மங்களூரு சிட்டி தெற்கு, மேலுகோட், மூடபித்ரி, முடிகெரே, நரசிம்மராஜா, புதூர், புலகேசிநகர், ராஜராஜேஸ்வரிநகர், சாந்தி நகர், ஷிமோகா, சரவணபெலகோலா, சிருங்கேரி, ஸ்ரீரங்கப்பட்டணம், திப்தூர், தீர்த்தஹள்ளி, தும்கூர் நகரம், உடுப்பி, விஜயநகரம், விராஜ்பேட்டை மற்றும் யஷ்வந்தபுரா ஆகிய தொகுதிகள் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் ஆகும்.

கர்நாடாகாவில் மொத்தத்தில், பெண்களின் வாக்குகளை விட ஆண்களின் வாக்குகள் அதிகம். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, மே 10-ம் தேதி 1.96 கோடி ஆண்களும் 1.91 கோடி பெண்களும் வாக்களித்தனர். ஆண்களின் வாக்குப்பதிவு 73.68 சதவீதமாகவும் பெண்களின் வாக்குப்பதிவு 72.70 சதவீதமாகவும் பதிவாகியுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Karnataka Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment