புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று காலை 11 மணியளவில் கூடி கட்சியின் புதிய தேசிய தலைவரைத் தேர்தெடுப்பதற்கான சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்ற செய்தி இன்றைய அரசியல் வட்டாரங்களில் அதிகமாய் பேசப்படுகின்றன.
இன்றையக் கூடத்தில் சோனியா,ராகுலின் பங்கு என்ன? புதுதலைவர் தேர்வில் இவர்களின் தாக்கம் எப்படி இருக்க போகிறது என்ற பல கேள்விகள் நம்மில் இருக்கலாம்.
ஆனால்,கூட்டத்தில் கலந்துகொண்ட இருவரும் உடனடியாக கிளம்பி விட்டார்கள் . செய்தியாளர்களிடம் பேசிய சோனியா "புது தலைவர் தேர்வில் எங்களால் எந்தவித தாக்கமும் இருக்க கூடாது, நாங்கள் இல்லாமேலே இது நடப்பது தான் நல்லது" என்று கூறினார்.
முதல் கட்ட கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சுர்ஜிவாலா, இரண்டாவது கட்ட கூட்டம் இரவு 8.30 மணிக்கு மேல் கூடும் என்றும், முடிந்த வரையில் இன்று இரவே முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சூழல்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னணி :
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, மே மாதம் ராகுல் காந்தி காங்கிரஸ் தேசிய தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புது தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக் அல்லது மல்லிகார்ஜுன் கார்கே இவர்களில் யாரேனும் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று அக்கட்சியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 25 அன்றே முடிவை ராகுல் காந்தி அறிவித்திருந்தாலும், இன்னும் அக்கட்சியின் அடுத்த தலைவரை அக்கட்சி தேர்வு செய்ய முடியாமல் உள்ளது.
புது தலைவர், கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்கும் கடுமையான பணியை செய்ய வேண்டியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூடியது. காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் மன்மோகன் சிங், ஏகே ஆண்டனி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பெரும்பாலான தலைவர்கள் மீண்டும் ராகுல் காந்தி பெயரையே தலைவர் பதவிக்கு முன்மொழிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.