மவுண்ட்பேட்டன் பிரபு, சி ராஜகோபால்ச்சாரி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் ‘செங்கோல்’ பற்றி விவரித்ததற்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் வெள்ளிக்கிழமை (மே 26) கூறியது.
தற்போது, ஆங்கிலேயர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகார பரிமாற்றத்தின் அடையாளமான இந்தச் செங்கோல் மக்களவையின் தலைவருக்கு அடுத்ததாக வைக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக அவர், “பிரதமர் நரேந்திர மோடியும் அவருக்கு மேளம் அடிப்பவர்களும் தமிழகத்தில் அரசியல் நோக்கத்திற்காக செங்கோலைப் பயன்படுத்துகின்றனர்.
இது அதன் திரிக்கப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப உண்மைகளை மாற்றுகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.
இந்தச் செங்கோல், மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிறகு, மக்களவைத் தலைவர் நாற்காலிக்கு அருகில் வைக்கப்படும்.
காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அக்கட்சி ஏன் இந்திய மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை மிகவும் வெறுக்கிறது என கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பாக அமித் ஷா ட்விட்டரில், “இந்தியாவின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் தமிழ்நாட்டின் ஒரு புனித சைவ மடத்தால் பண்டிட் நேருவுக்கு புனிதமான செங்கோல் வழங்கப்பட்டது.
ஆனால் அது ஒரு ‘வாக்கிங் ஸ்டிக்’ ஆக அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டது. தற்போது, புனித சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனத்தின் வரலாற்றை போலி என்று காங்கிரஸ் சொல்கிறது! அவர்களின் நடத்தையை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து ஜெ.பி நட்டா, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் கட்சிகள் வாரிசு அரசியல் கட்சிகள். அவர்களின் முடியாட்சி முறைகள் நமது அரசியலமைப்பில் உள்ள குடியரசு மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளுடன் முரண்படுகின்றன” என்றார்.
தொடர்ந்து, “நேரு-காந்தி குடும்பத்தால் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவரை ஜீரணிக்க முடியவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இந்திய சுதந்திர தினத்தன்று, “புனிதமான “செங்கோல்” நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது, ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்பட்ட சரியான தருணம் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் 19 பேர் இணைந்து புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான எதிர்கட்சிகளின் கூட்டறிக்கையில், “ஜனாதிபதி திரௌபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைப்பது, பாரதூரமான அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“