நேற்றைய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கடுமையான விவாதத்திற்கு மத்தியில், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக், ஜிதின் பிரசாதா ஆகிய நான்கு செயற்குழு உறுப்பினர்கள் கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு தேவை என்று விடாபிடியாக வாதிட்டனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிகிறது. இந்த, நான்கு செயற்குழு உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூட்டம் முடிந்த உடன் ஆனந்த் சர்மா, கபில் சிபல், மனிஷ் திவாரி, சஷி தரூர் உட்பட 9 காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத்தின் இல்லத்தில் சந்தித்தனர். ஷர்மா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம்" கையொப்பமிட்டவர்கள் அனைவரும் விவாதங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர், அனைவரும் திருப்தி கொள்கின்றனர்" என்று கூறினார்.
" செயற்குழு கூட்டத்தில் வெளிப்படையான முறையில் விரிவான விவாதம் நடைபெற்றது. அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் கிடைக்கவில்லை. இது, ஏராளமான தவறான புரிதல்களுக்கு வழி வகுத்தன. பிரச்சினைகள் என்ன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். கடிதம் அனைவருக்கும் கிடைக்கும்படி பொது வெளியில் வெளியிடப்பட வேண்டும் என்று நான் கோரினேன்,”என்று கூறினார்.
காங்கிரஸ் செயற்குழுவின் மெய்நிகர் கூட்டத்தைப் பற்றி குறிப்பிட்ட அவர் “ஆசாத், முகுல் வாஸ்னிக் மற்றும் நான் எங்கள் கருத்துக்களை முன்வைத்தோம். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பேச்சின் உரையில் குறிப்பிட்ட விசயங்கள் கட்சியின் நல்லிணக்கத்திற்கான செய்தியை தெளிவாக எடுத்துரைத்தது. கசப்பான சம்பவங்கள் நம் பின்னால் இருக்கட்டும், நாம் உறுதியாக ஒன்றுபட்டு முன்னேறலாம் என்று கூறினார். கடிதத்தின் சில பகுதிகள் ஊடங்களுக்கு கசிந்தது நினைத்து வேதனை அடைந்திருந்தாலும், கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் அனைவரும் எனது மதிப்புமிக்க சகாக்கள் என்று சோனியா காந்தி தெரிவித்தார். நாங்கள் அவரை மதிக்கிறோம், இது ஒரு சுமுகமான தீர்வுக்கு வழி வகுக்கிறது" என்று தெரிவித்தார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில், கடிதத்தில் கையொப்பமிட்ட முக்கியத் தலைவர்கள் தங்களின் இந்த நடவடிக்கை சோனியா, ராகுல் காந்திக்கு எதிரானது அல்ல என்பதை தெளிவுபடுத்தினர். மேலும், அந்த ஐந்து பக்க கடிதத்தில் இருவருக்கும் எதிராக கருத்துக்கள் கூறப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினர். கடிதத்தின் உள்ளடக்கங்களை முதலில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இருப்பினும், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடிதம் எழுதப்பட்ட நேரத்தை விவாதப் பொருளாக்கினார். ராஜஸ்தானில் ஆட்சியைக் காப்பாற்ற கட்சி போராடிக் கொண்டிருந்தபோதும், தாயார் மருத்துவமனையில் இருந்தபோதும், கடிதம் அனுப்பப்பட்டதாக வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த ஆசாத், "சோனியா காந்தி மருத்துவமனையில் திரும்பிய ஆறு நாட்களுக்கப் பிறகு தான் கடிதம் அனுப்பப்பட்டது. கட்சித் தலைவருடன் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றோம். அவர், ஆரோக்கியமாக உள்ளார் என்று அவரது அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்ட பின்னரே கடிதம் அனுப்பப்பட்டது" என்று ஆசாத் கூட்டத்தில் தெரிவித்தார்.
நேரு - காந்திகளுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டுகளை ஆசாத், ஷர்மா முற்றிலும் நிராகரித்ததோடு, காங்கிரஸ் கூட்டுத் தலைமையின் ஒரு 'ஒருங்கிணைந்த பகுதியாக' நேரு-காந்தி குடும்பம் எப்போதும் இருக்கும் என்பதை அந்தக் கடிதம் தெளிவுபடுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
"பாஜக/ஆர்எஸ்எஸ் அரசியலை எப்படி கையாள்வது என்பது தான் கடித்தத்தின் முக்கிய நோக்கம். ஜவஹர்லால் நேரு முதல் சோனியா, ராகுல் வரை கட்சிக்கு அளித்த பங்களிப்புகளை எடுத்துரைக்கும் வகையில் மூன்று பத்திகள் உள்ளன. இருப்பினும், தற்போது காங்கிரசில் அடையாளம் காணப்பட வேண்டிய சில அடிப்படை பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை எழுப்புவது குற்றமா?" என்ற கேள்வியை சர்மா கூட்டத்தில் எழுப்பியதாக அறியப்படுகிறது.
பா.ஜ.க.வின் உத்தரவின் பேரில் இந்த கடிதம் அனுப்பப்பட்டதாக செயற்குழு உறுப்பினர்கள் அல்லாத சில நபர்கள் கூறியதாக ஆசாத் கூறினார். இத்தகைய, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இப்போதே ராஜினாமா செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.
கூட்டத்தில், சர்மா " தாங்கள் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரர்கள்" ( lifelong Congressmen) என்றும், கட்சியில் மிகக் குறைவானவர்கள் மட்டுமே தங்களை போன்று நன்மதிப்பை பெற்றவர்கள் என்றும் கூறினார். 1978 ல் கட்சி பிளவு கண்ட போது, நானும், குலாம் நபி ஆசாதும் இந்திரா காந்தியுடன் துணை நின்றோம். பல காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்திக்கு நம்பிக்கைத் துரோகமும், துஷ்பிரயோகம் செய்தனர். அடுத்ததாக, சஞ்சய் காந்தியோடு இணைந்து போராடி சிறைக்குச் சென்றோம். சிறையில் கடுமையாக தாக்கப்பட்டோம். நம்மில் சிலர் மட்டும் அந்த காயத்தின் அடையாளங்களை வைத்திருக்கிறாம்"என்று அவர் கூறியதாக அறியப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, அதன் நற்பண்புகளை மீண்டும் கண்டுபிடிக்க போகிறோம் என்று கூறி கட்சிக்குத் திரும்பிய 'அரசியல் சுற்றலா வாசிகள்' தான் இன்று தங்களை கேள்வி எழுப்பி வருகின்றனர் என்றும் சர்மா தெரிவித்தார்.
நாங்கள் குற்றவாளிகளைப் போல சித்தரிக்கப்படுகிறோம், ஒரு கடிதம் எழுதுவது குற்றமா? என்று முகுல் வாஸ்னிக் தனது வாதத்தை முன்வைத்தார்.
மேலும், அவர் கூறுகையில், "ஆசாத், ஷர்மா எழுப்பிய பிரச்சினைகளை விவாதப் பொருளாக எடுத்திருக்கலாம். ஆனால், எங்களை தவறுதலாக சித்தரிக்கக்கூடாது. கட்சியின் மறுமலர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களை அவர்கள் எழுப்புகின்றனர். நாடு, பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஒன்றுபட்ட, புத்துயிர் பெற்ற காங்கிரஸால் மட்டுமே பாஜக / ஆர்.எஸ்.எஸ் அமைப்பை எதிர்கொள்ள முடியும்" என்று தெரிவித்தார்.
"கடிதம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அம்பிகா சோனி தெரிவித்து வருகிறார். கட்சிக்குள் கூட்டுத் தலைமையை உருவாக்குவது, நாடாளுமன்ற வாரியக் குழுவை அமைப்பது, போன்ற கோரிக்கைகளை எழுப்புவது கட்சிக்கு இழைக்கப்பட்ட துரோகமாக இருந்தால், நடவடிக்கை எடுங்கள்,"என்று அவர் சொன்னார்.
பாஜகவின் உத்தரவின் பேரில், கடிதம் எழுதியதாக ராகுல் குற்றம் சாட்டியதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் ஆசாத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெளிவுபடுத்தினார்.
"சோனியா, ராகுல் காந்தியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இருப்பினும், சில பிரச்சினைகள் உள்ளன, அவற்றை நாங்கள் எழுப்பியுள்ளோம். கட்சிக்குள் உட்பூசல் இல்லை. இது கட்சியின் உள் விவகாரம். சில நேரங்களில் நாங்கள் கூட்டத்தில் விவாதிக்கிறோம், சில நேரங்களில் அதை நாங்கள் எழுதுகிறோம், ”என்று ஆசாத் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.