வடகிழக்கு தேர்தல்களில் காங்கிரஸின் செயல்திறன் அதன் எதிர்பார்ப்புகளைவிட மிகக் குறைவாக இருந்தது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் மட்டுமே காங்கிரசுக்கு சிறிது மகிழ்ச்சி அளித்துள்ளது.
திரிபுரா மற்றும் மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், கடந்த முறை வெற்றி பெறாத திரிபுராவில் ஒருசில இடங்களை வென்று, மேகாலயா சட்டசபையில் ஓரளவு முன்னிலையை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் நம்பிக்கை அளித்துள்ளது. நாகாலாந்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய நம்பிக்கை இல்லை.
மேகாலயாவில், 2018-ம் ஆண்டு தேர்தலில் 21 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால், இந்த முறை ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் தேர்தலில் இறங்கியது. நவம்பர் 2021-ல், முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உட்பட 12 சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு (டிஎம்சி) மாறினர். மற்றவர்களும் கட்சியில் இருந்து வெளியேறி வேறு கட்சிகளில் இணைந்தனர்.
மதியம் 1.45 மணியளவில் திரிபுராவில் காங்கிரஸ் 3 இடங்களிலும், மேகாலயாவில் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று 3 இடங்களில் முன்னிலை வகித்தது.
மேகாலயாவில் ஏராளமான புதிய முகங்களுடன் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. அதன் 60 வேட்பாளர்களில், 47 பேர் 45 வயதுக்குட்பட்டவர்கள். இந்த புத்திசாலித் தனமான நடவடிக்கை வேலை செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி காம்பேக்ரே தொகுதியை வென்றது. மவாத்தி, உம்ஸ்னிங் மற்றும் நாங்ஸ்டோயின் ஆகியவற்றில் முன்னிலை பெற்றது.
ஆனால் இந்த முன்னிலை மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே இருந்தன. உம்ஸ்னிங்கில், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான செலஸ்டின் லிங்டோ வெறும் 1,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். மாவாத்தி மற்றும் நாங்ஸ்டோயினிலும் இதே நிலைதான்.
திரிபுராவில் கடந்த முறை காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இம்முறை மூன்று தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 13 இடங்களில் 5 முதல் 8 இடங்களில் வெற்றிபெறும் என்று நம்பியிருந்தது. மேலும், இடதுசாரிகள் பெரும் வெற்றியை எதிர்பார்த்தனர் இடதுசாரிகள் 25 முதல் 29 இடங்களை கைப்பற்றும் என்று காங்கிரஸ் தலைமையிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது. ஆனால், கடந்த முறை 16 இடங்களில் இருந்த இடதுசாரிகள் தற்போது 11 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றனர்.
எதிர்பார்த்தபடி, அகர்தலா தொகுதியில் காங்கிரஸின் பலம் வாய்ந்த வேட்பாளர் சுதீப் ராய் பர்மன் அதிக வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்ஹாவும் கைலாஷாஹர் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். பனமாலிபூரில், கோபால் சந்திர ராய் 1,293 வாக்குகள் வித்தியாசத்தில் மாநில பாஜக தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜியை விட முன்னிலை வகிக்கிறார். கட்சி பாபியச்சாராவிலும் மெல்லிய முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸின் சத்யபன் தாஸ் 408 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
இடைத்தேர்தல்கள்
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸை (டி.எம்.சி) தோற்கடித்து, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்டிகி தொகுதியை ஆளும் கட்சியிடம் இருந்து பறிக்க தயாராக உள்ளது. இந்த தொகுதியில் 2011-ம் ஆண்டு முதல் டி.எம்.சி வெற்றி பெற்று வந்தது.
ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். இது காங்கிரஸின் வெற்றி மட்டுமல்ல. ஆளும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வேட்பாளராக இளங்கோவன் இருந்ததால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் பிம்பத்தால் பலன் அடைந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.