/indian-express-tamil/media/media_files/npqnFfL8t99KnBbGIHvs.jpg)
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவின் வளத்தை இஸ்லாமியர்களிடம் வழங்கும் என்றும் அவர்கள் அதிகம் குழந்தைகளை பெற்றுகொள்வார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி பேரணி சென்ற போது பேசியதாவது : “ இதற்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இஸ்லாமியர்களுக்குத்தான் இந்தியாவின் வளத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தது. அப்படியென்றால் இந்தியாவின் வளத்தை ஊடுருவப் பார்ப்பவர்கள் மற்றும் அதிக குழந்தைகளை பெற்றுகொள்பவர்களுக்கு, அவர்கள் பிரித்து கொடுக்க உள்ளனர். நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை அவர்களுக்கு கொடுக்க உங்களுக்கு சமதமா? இதை ஏற்றுக்கொள்வீர்களா? என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் “ நமது வயதான தாய்மார்கள் மற்றும் மகள்களின் சொத்தை எடுத்து, இஸ்லாமியர்களுக்கு வழங்குவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது. சகோதர சகோதரிகளே, இந்த நக்சல் மனநிலை, நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலியை கூட விட்டுவைக்காது “ என்று பேசினார்.
2006ம் அண்டு தேசிய வளர்ச்சி கவுன்சில் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், கூறுகையில் “ சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் அதிகாரம் பெறுவதை உறுதிசெய்ய, புதுமையான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்” பேசியிருந்தார்.
மேலும் மோடி நேற்றைய தினத்தில் பேசுகையில் “ இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொய்களை பரப்புகிறது. அவர்கள் பழங்குடியினர், தலித் அல்லது சிறுபான்மையர் மத்தியில் பயத்தை உருவாக்குவார்கள். இந்நிலையில் அவர்கள் கூறும் பொய்கள் எப்போதும் உதவது இல்லை. பழங்குடியினருக்கு அவர்களது உரிமையை பற்றி தெரிந்திருக்கிறது” என்று பேசினார்.
ராஜஸ்தானில் உள்ள ஜலோரில், பேசிய மோடி “ தேர்தலில் வெற்றி பெற முடியாத, நபர்களை, ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் அனுப்புகிறது.
மேலும் பேசிய அவர் “ ஒரு காலத்தில் 400 இடங்களை வென்ற காங்கிரஸ், தற்போது 300 இடங்களில் கூட போட்டியிட முடியவில்லை. இந்தியா கூட்டணிசந்தர்ப்பவாத கூட்டாணி” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.