Karnataka Assembly Election 2023 : கர்நாடக மாநிலம் பிதாரில் இன்று (ஏப்.29) காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
கர்நாடக மாநிலத்தித்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மே10ஆம் தேதி காலை நடைபெறுகிறது.
இங்கு பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் வாக்குகளை பிரிக்கும்பட்சத்தில் மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு பிதாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, இதுவரை காங்கிரஸ் என்னை 91 முறை துன்புறுத்தியுள்ளது. ஆனால் நான் தொடர்ந்து மக்கள் பணி செய்துவருகிறேன்” என்றார்.
தொடர்ந்து இந்த இரட்டை என்ஜின் பாஜக அரசாங்கம் உள்ளூர் மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறது. நெசவாளர்களையும் கைவினைஞர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்” என்றார்.
மேலும், “பாஜக அரசு லட்சியங்களுக்கு பலம் தரும் அரசு, கனவுகளை நனவாக்கும் அரசு, இளைஞர்களின் அரசு” என்றார்.
கர்நாடகத்தில் தேர்தல் பரப்புரை மக்கள் மத்தியில் வேகமெடுத்துள்ளது. இதற்கிடையில் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களும் தொடர்கிறது.
காங்கிரஸார் பிரதமர் நரேந்திர மோடியை விஷப் பாம்பு என விமர்சித்த நிலையில் பாஜகவினர் சோனியா காந்தியை விஷக் கன்னி எனக் கூறியுள்ளனர். மேலும் ராகுல் காந்தியை பைத்தியம் எனவும் பாஜகவினர் சாடியுள்ளனர்.
பிதார் பொதுக்கூட்டத்தை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி விஜயபுரா, குடாச்சி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணிகளில் உரையாற்றுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“