சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர்.-க்கு எதிராக 20 எதிர்க்கட்சிகள் தீர்மானம்; திமுக புறக்கணித்தது ஏன்?

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்.-க்கு எதிராக 20 எதிர்க்கட்சிகள் கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருந்த திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

By: Updated: January 13, 2020, 11:45:44 PM

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்.-க்கு எதிராக 20 எதிர்க்கட்சிகள் கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருந்த திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் 20 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்ட கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், மத்திய அரசு சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) திரும்பப் பெற வேண்டும் என்றும், நாடு தழுவிய தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பிஆர்) நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இந்த தீரமானத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான அடிப்படையாக என்.பி.ஆர் அழைக்கப்படுதன் மூலம், சி.ஏ.ஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சி ஆகியவை அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு தொகுப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும், இது குறிப்பாக ஏழைகள், நலிந்தவர்கள், எஸ்சி / எஸ்டி பிரிவினர் மற்றும் மொழி மற்றும் மத ரீதியான சிறுபான்மையினரை குறிவைக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.

“என்.ஆர்.சி.யை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த அனைத்து முதலமைச்சர்களும், இது என்.ஆர்.சிக்கு முன்னோடியாக இருப்பதால் என்.பி.ஆர் கணக்கீட்டை நிறுத்திவைக்க வேண்டும்.” என்று இந்த தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி, இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் பதிலாக பாஜக அரசு வகுப்புவாத பகைமையை கூர்மைப்படுத்தும் ஆபத்தான போக்கில் இறங்கியுள்ளது என்று இந்த தீரமானத்தில் கூறியுள்ளனர்.

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, நரேந்திர மோடி, அமித் ஷா தலைமையிலான அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பரவலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வளாகங்களில் நடந்த வன்முறைகளை அடுத்து மக்களுக்கு ஆட்சி மற்றும் பாதுகாப்பை வழங்க இயலாமை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

ஜாமியா, பி.ஹெச்.யு, அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் ஏ.எம்.யு மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களில் நடந்த சம்பவங்களுக்குப் பிறாகு ஜே.என்.யு மீது பாஜக நடத்திய திட்டமிட்ட தாக்குதலை நாடே திகிலுடன் பார்த்தது. மக்களை நிர்வகிக்கவும் பாதுகாப்பை வழங்கவும் இயலாமையால் மோடி-ஷா அரசு அம்பலப்படுகிறது” என்று சோனியா காந்தி கூறினார்.

அரசு அடக்குமுறை அடக்குமுறை ஆட்சியை கட்டவிழ்த்து விட்டதாகவும் மக்களை குறுங்குழுவாத வழிகளில் பிளவுபடுத்துவதற்காக வெறுப்பை பரப்புவதாகவும் சோனியா காந்தி கூறினார். “தற்போது முன்மாதிரி இல்லாத கொந்தளிப்பு உள்ளது. அரசியலமைப்பு குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, ஆளும் கருவிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன” என்றும் அவர் சாடினார்.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி குறித்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் நாட்டை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டிய காந்தி, “அவர்கள் சில வாரங்களுக்கு முன்பு தாங்கள் கூறிய கருத்துகளுக்கு முரணாக உள்ளனர். மேலும், அவர்கள் ஆத்திரமூட்டும் அறிக்கைகளைத் தொடர்கின்றனர். அதே நேரத்தில் பெரிய அளவில் அதிகரித்து வரும் அரசு அடக்குமுறை மற்றும் வன்முறைக்கு உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள” என்று சோனியா காந்தி கூறினார்.

இந்த கூட்டத்திற்குப் பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தோல்வியுற்ற பொருளாதாரத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப அரசாங்கம் தேசத்தை பிளவுபடுத்துகிறது என்றும், பிரதமர் நரேந்திர மோடியை பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பொருளாதாரம் மற்றும் வேலையின்மை குறித்து மாணவர்களுடன் பேசுமாறு சவால் விடுத்தார்.

சோனியா காந்தி கூட்டிய இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் என்.சி.பி தலைவர் சரத் பவார், எல்.ஜே.டி தலைவர் சரத் யாதவ், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருப்பினும், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, டி.எம்.சி, திமுக ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. இந்த சந்திப்பு தனது கட்சி ஊழியர்களை “மனச்சோர்வை ஏற்படுத்தும்” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியிருந்தார். ஆம் ஆத்மி கட்சியும் சிவ சேனாவும் தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்று கூறியுள்ளன.

காங்கிரஸ் தலைமையில் 20 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருந்துவரும் திமுக பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், அண்மையில் தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஊடகங்களிடம் கூறினார். இது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் இதனை நேரடியாக தன்னிடம் கூறியிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன். ஆனால், இப்படி ஊடகங்களிடம் கூறியது ஸ்டாலினுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான், திமுக இன்று டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Congress lead 20 opposition parties meeting pass resolution dmk not participate

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X