‘எதையும் செய்யாமல் பேசுவது சுய பரிசோதனை அல்ல’ கபில் சிபலுக்கு ஆதிர் ரஞ்ஜன் சௌத்ரி கண்டனம்

ஆதிர் ரஞ்ஜன் சௌத்ரி “கபில் சிபல் காங்கிரஸ் கட்சி பற்றி சுய பரிசோதனை தேவை என்று மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அவர் பீகார், ம.பி., உ.பி., அல்லது குஜராத்தில் நடந்த தேர்தல்களில் அவரது முகத்தை நாங்கள் காணவில்லை”

By: Updated: November 18, 2020, 09:25:28 PM

பீகார் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மோசமாக தோல்விடைந்ததை அடுத்து, காங்கிரஸை விமர்சித்ததற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்ஜன் சௌத்ரி கண்டித்துள்ளார்.

மிகப் பெரிய பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியில் இரு தலைவர்களுக்கு இடையிலான வார்த்தை போர் கட்சியின் தலைமை குறித்த கேள்வி மீது கவனத்தை கொண்டுவந்தது.  கபில் சிபலுக்கு சுய பரிசோதனை தேவை என்று ஆதிர் ரஞ்ஜன் சௌத்ரி புதன்கிழமை விமர்சனம் செய்துள்ளார்.

“கபில் சிபல் இதைப் பற்றி முன்பே பேசினார். அவர் காங்கிரஸ் கட்சி பற்றி மிகவும் கவலைப்படுவதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு சுய பரிசோதனை தேவை குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் அல்லது குஜராத்தில் நடந்த தேர்தல்களில் அவரது முகத்தை நாங்கள் காணவில்லை” என்று ஆதிர் ரஞ்ஜன் சவுத்ரி கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

வெறும் பேச்சு எதையும் சாதிக்காது என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்ஜன் சௌத்ரி “கபில் சிபல் பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தால், அவர் சொன்னது சரியா என்பதை நிரூபிக்க முடியும். மேலும், அவர் காங்கிரஸின் நிலைப்பாட்டை பலப்படுத்தினார். வெறும் பேச்சு எதுவும் சாதிக்காது. எதையும் செய்யாமல் பேசுவது என்பது சுய பரிசோதனை என்று அர்த்தமல்ல.” என்று கூறினார்.

கபில் சிபல், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், மக்கள் இனி காங்கிரஸ் கட்சியை ஒரு பயனுள்ள மாற்றாக பார்க்கவில்லை என்றும், தலைமை இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றும் கூறினார். காங்கிரஸ், அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பதில்களை அறிந்திருக்கிறது. ஆனால், அவற்றை அங்கீகரிக்க தயாராக இல்லை என்று அவர் கூறினார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை கபில் சிபல் தனது கருத்துக்களை பகிரங்கமாக கூரியதற்காக கண்டிதார். அதே நேரத்தில் எம்.பி.க்கள் விவேக் டங்கா மற்றும் கார்த்தி சிதம்பரம் போன்ற சில தலைவர்கள் சிபல் கூறியதை மீண்டும் வலியுறுத்தினர். கெலாட் தொடர்ச்சியான ட்வீட்களில், ஊடகங்களில் உள் பிரச்சினைகள் பற்றி கபில் சிபல் குறிப்பிடத் தேவையில்லை என்று கூறினார். ஒவ்வொரு தேர்தல் தோல்விக்கும் பின்னர், காங்கிரஸ் கட்சித் தலைமையில் உறுதியான நம்பிக்கையை காட்டியுள்ளது என்றும் அது ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் வலுவாக வெளிப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கபில் சிபலின் கருத்தை கண்டித்து, அசோக் கெலாட் ட்வீட் செய்கையி, “கபில் சிபல் ஊடகங்களில் நம்முடைய உள் பிரச்சினையை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இது நாடு முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி 1969, 1977, 1989 பின்னர் 1996 இல் பல்வேறு நெருக்கடிகளைக் கண்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் நம்முடைய சித்தாந்தம், திட்டங்கள், கொள்கைகள் மற்றும் கட்சித் தலைமையின் மீதான உறுதியான நம்பிக்கை காரணமாக நாம் வலுவாக வெளிவந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், மற்றொரு புறம், ராஜ்யசபா எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியின் சட்டத் துறை தலைவருமான டங்கா, கபில் சிபலின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அவர், “கட்சி சறுக்குவதை எங்களால் பார்க்க முடியாது. அது நெகிழ்வதை எங்களால் பார்க்க முடியவில்லை. மற்றவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைகள் காரணமாக பேசாமல் இருக்கலாம். எனக்கும் கபிலுக்கும் வேறு பிரச்சினைகளும் இல்லை. எங்கள் பிரச்சினை காங்கிரஸின் மறுமலர்ச்சி. எங்களைப் போன்றவர்கள் முன் வந்து அதைப் பற்றி பேசவில்லை என்றால், வரலாறு எங்களை மன்னிக்காது.” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Congress leader adhir ranjan chowdhuri hits out at kapil sibal bihar polls

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X