பொதுப்பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அளிக்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக மத்தியப் பிரதேச காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ.23) மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
பொதுப்பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நவ.7ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மொத்தமுள்ள 5 நீதிபதிகளில் 3 பேர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக மத்தியப் பிரதேச காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனுத்தாக்கல் செய்தார்.
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் 2019ஆம் ஆண்டு கொண்டுவந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அக்கட்சி வரவேற்றது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil