ரபேல் ஒப்பந்தம் குறித்தும் அந்த பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் மீது குற்றச்சாட்டை முன்னிறுத்தியது. இந்நிலையில் ஏற்கனவே பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் “இந்திய அரசின் நிர்பந்தத்தினை தொடர்ந்து தான் நாங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தோம்” என்று கூறினார். இது பற்றி முழுமையாக படிக்க
ரபேல் ஒப்பந்தம் – புகார் அளித்த காங்கிரஸ் தலைவர்கள்
இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்தால் தான் உண்மை நிலவரத்தை அறிய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இது குறித்து இன்று மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் ஒன்றை சமர்பித்து முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆணையர் சௌத்ரியை நேரில் சந்தித்த மூத்த உறுப்பினர்கள் “ தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு, இந்த பேரம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் முறையாக சமர்பிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.
பின்னர் இந்த அரசு மக்களின் வரிப்பணத்தினை தவறான வழியில் செலவு செய்கிறது என்றும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் நடந்து கொள்கிறது என்றும் குறிப்பிட்டனர். ஏற்கனவே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் என்ற பொதுத்துறை நிறுவனம் இருக்கும் போது ஏன் “நண்பர்கள் என்ற காரணத்திற்காக” தொழிலதிபர்களிடம் ஆஃப்செட் பேரத்தினை ஒப்படைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
டெண்டர் ஏதும் நடத்தாமல் எப்படி இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திடம் அரசு ஒப்படைக்கும் என்று கேள்விகளும் எழுப்பி, இந்த பேரத்தில் போடப்பட்டிருக்கும் முதலீடு குறித்து முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்துள்ளனர் மூத்த உறுப்பினர்கள்.
அளிக்கப்பட்ட புகாரில் மேற்கோள் காட்டப்பட்டவை
2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போட்ஜி 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானது. 126 விமானங்களை வாங்குவது தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் கட்சி செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது தற்போதைய மத்திய அரசு.
ஒரு ரபேல் போர் விமானத்தின் விலையானது 300% அதிகரித்து உள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் அதிக அளவு விரையமாகி உள்ளது என்று காங்கிரஸ்ஸார் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்திய விமானப் படையுடன் ஆலோசனை செய்யாமல் எப்படி போர் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும் கேள்வி எழுப்பபட்டுள்ளது. மேலும் படிக்க : எது உண்மையான முகம் ? அருண் ஜெட்லியிடம் சிதம்பரம் கேள்வி
மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளிக்க குலாம் நபி ஆசாத், அஹ்மத் படேல், ஆனந்த் சர்மா, கபில் சிபில், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ், அபிசேக் மனு சிங்வி, மனிஷ் திவாரி, விவேக் டன்கா, ப்ரமோத் திவாரி, ப்ரனவ் ஜா ஆகியோர்கள் வந்திருந்தனர்.
பிரான்கோய்ஸ் தன்னுடைய கருத்தினை தெரிவிக்கும் முன்பு வரை டஸ்ஸல்ட் மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்பது தனியார் நிறுவனங்களுக்கு இடையான ஒப்பந்தம். இதில் எந்த அரசின் தலையீடும் இல்லை என்று கூறிவந்தனர்.
To read this article in English
பிரான்கோய்ஸ் தன்னுடைய கருத்தினை அறிவித்த பின்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மோடியை திருடர் என்றும் நம் ராணுவ வீரர்களின் இரத்தம் அவமதிக்கப்பட்டுவிட்டது என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
காங்கிரஸ் கட்சிகளின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அருண் ஜெட்லி “எதுவும் தானாக நடக்கவில்லை. ராகுல் காந்தி ரபேல் பற்றி ட்வீட் செய்யவும் தான் பிரான்கோய்ஸ் பேசியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.