ரஃபேல் ஒப்பந்தம் : ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டோம்- பிரான்ஸ் முன்னாள் அதிபர்

Ex-President of France Francois Hollande Commented on Rafale Deal : தொடர் சர்ச்சைகளுக்குள் மாட்டிக் கொண்ட அனில் அம்பானியின் நிறுவனம்...

ரஃபேல் போர் விமானம் தொடர்பாக அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக் கொள்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். ரிலையன்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டேவின் காதலியை வைத்து சில வருடங்களுக்கு முன்பு படம் ஒன்றை இயக்கியது.

ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் – குற்றச்சாட்டு

அதே போல் இந்தியாவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்று ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்திற்காக பேசிய போது அனில் அம்பானி அங்கு இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே “ரஃபேல் போர் விமானங்களின் ஆஃப்செட் பணிகளை கவனித்துக் கொள்வதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்தது இந்திய அரசு தான்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க : பிரான்கோய்ஸ் காதலியை வைத்து படம் தயாரித்த ரிலையன்ஸ் நிறுவனம்

ஏற்கனவே இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைக்கேடுகள் இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனங்களையும் புகார்களையும் தெரிவித்த வண்ணம் இருந்தார்.

தற்போது ஹோலண்டே, ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதாக “ இந்தியாவில் ரபேல் போர் விமானங்களின் ஆஃப்செட் பகுதிகளை தயாரிப்பதற்கு அதிக அளவில் வாய்ப்புகளை தரவில்லை. மாறாக டஸ்ஸால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய நெருக்கடியை உருவாக்கிக் கொடுத்தது இந்திய அரசு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close