2018 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.கவிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றிய மத்தியப் பிரதேசத்தின் மஹாகோஷல் தொகுதிக்கு இந்த முறை பா.ஜ.கவின் மத்திய இணை அமைச்சர் பிரஹலாத் படேல், பிரச்சாரம் கையாளும் பணிக்கு அனுப்பபட்டார்.
முக்கியமான பிராந்தியத்தில் காங்கிரஸின் கோட்டைகளை உடைக்கும் பொறுப்பை படேல் சுமக்க வேண்டியிருந்தது மட்டுமல்லாமல் பல்வேறு பணிகளை செய்ய வேண்டியிருந்தது.
ஞாயிற்றுக் கிழமை தேர்தல் முடிவுகளின்படி, மகாகோஷலில் 2018 இல் காங்கிரஸ் வென்ற 16 இடங்களில் பா.ஜ.கவின் கை ஓங்கியது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றிக்கு காரணமான காரணிகள் குறித்து பிரஹலாத் படேல் பேசினார்.
கேள்வி: இந்தத் தேர்தலில் வெற்றி பெற உங்களுக்கு நிறைய தடைகள் இருந்தன. உங்களுக்கு சாதகமாக இருந்த முக்கிய காரணிகள் என்ன?
சமூகத்தின் 4 தூண்களை நாங்கள் நம்பியிருந்தோம், அதைச் சுற்றி பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் ஆகிய நான்கு முக்கிய சமூகக் குழுக்களுக்கான திட்டங்களை உருவாக்கினோம்.
இந்த திட்டங்கள் தகுதியான மக்களிடம் கொண்டு செல்வதை நாங்கள் உறுதி செய்தோம். தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை, பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தேன்.
கேள்வி: ம.பி-ல் உங்களின் மிகப் பெரிய நன்மை என்ன? லட்லி பெஹ்னா திட்டம் உங்களுக்கு உதவியதா?
ஒரு திட்டத்தால் யாரும் வெற்றி பெறுவதில்லை. எங்கள் செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல எங்கள் அமைப்பு மற்றும் தகவல் தொடர்பு திறன்களை நாங்கள் பயன்படுத்தினோம். காங்கிரஸ் பொய் கூறியதை அவர்கள் உணர்ந்தனர். மற்ற மாநிலங்களில் எங்களிடம் லட்லி பெஹ்னா இல்லை, ஆனாலும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரை வென்றோம். மோடி மந்திரத்தால் நாங்கள் வெற்றி பெற்றோம்.
கேள்வி: மகாகோஷலில் காங்கிரஸின் கோட்டைகளை உடைப்பதற்கான உங்கள் முக்கிய உத்தி என்ன?
காங்கிரஸ் கட்சி தவறு செய்தது. அதனால் மக்களிடம் அவர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மறுபுறம், காங்கிரஸ் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பின்வாங்கிவிட்டதாக மக்களிடம் கூறினோம். அதுவே எங்களின் உத்தியாக இருந்தது. கடந்த முறை மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தபோது, அதன் 15 மாத கால ஆட்சியில் தவறான ஆட்சி இருந்தது. இதை மக்களிடம் கூறினோம், அவர்கள் உணர்ந்து கொண்டனர். காங்கிரஸிடம் கொள்கைகள் எதுவும் இல்லை, அவர்களின் தலைவர்கள் சோர்வாகவும் வயதானவர்களாகவும் இருந்தனர். வலுவான தலைவர் இல்லை, அது அவர்களை காயப்படுத்தியது.
கேள்வி: மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களை களமிறக்கியது பாஜகவுக்கு உதவியதா? பல கட்சிகள் இந்த வியூகத்தை விமர்சனம் செய்தனரே?
வியூகம் வேலை செய்தது என்பது இப்போது தெளிவாகிறது. அதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஒரு பிரபலமான தலைவரின் (பிரதமர் மோடி) செய்தியும் வேலை செய்தது. எங்களிடம் ஒரு வியூகவாதியும் (அமித் ஷா) இருந்தார்.
எங்கள் கட்சியின் தலைவர் (ஜே.பி. நட்டா) பூத் அளவிலான ஊழியர்களை விட அதிகமாக வேலை செய்தார் என்று நான் கூறுவேன். இந்த காரணிகள் அனைத்தும் இணைந்து மத்திய அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட உதவியது.
கேள்வி: முதல்வர் யார் என்பதை கட்சி முடிவு செய்துவிட்டதா? நீங்கள் அதில் இருக்கிறீர்களா?
நான் யூகங்களில் ஈடுபடுவதில்லை. கட்சி எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதைச் சிறந்த முறையில் நிறைவேற்றத் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/union-mos-prahlad-patel-congress-made-mistakes-in-mp-their-leaders-were-tired-and-old-9053363/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.