Advertisment

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் முத்திரையை தாங்கியுள்ளது – மோடி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக்கின் முத்திரையை முழுவதுமாக தாங்கி நிற்கிறது, தேர்தல் அறிக்கையின் எஞ்சிய பகுதி இடதுசாரிகளின் ஆதிக்கத்தில் உள்ளது; உத்திரபிரதேச தேர்தல் பரப்புரையில் மோடி பேச்சு

author-image
WebDesk
New Update
modi bjp cong

பிரதமர் மோடி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முஸ்லீம் லீக்குடன் காங்கிரஸை கிட்டத்தட்ட சமன் செய்து, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது "முஸ்லீம் லீக்கின் முத்திரையை முழுமையாகக் தாங்கியுள்ளது" என்றும், "அதன் எஞ்சிய பகுதி இடதுசாரிகளால் ஆதிக்கம் செலுத்துகிறது" என்றும் கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Congress manifesto completely bears imprint of Muslim League: PM Modi

உத்திர பிரதேசத்தின் சஹாரன்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய மோடி, சுதந்திர இயக்கத்தின் போது இருந்த காங்கிரஸ், "பத்தாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது" என்று கூறினார்.

“... சுதந்திரத்தின் போது முஸ்லிம் லீக்கில் நிலவிய அதே சிந்தனையை நேற்று காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக்கின் முத்திரையை முழுவதுமாக தாங்கி நிற்கிறது, தேர்தல் அறிக்கையின் எஞ்சிய பகுதி இடதுசாரிகளின் ஆதிக்கத்தில் உள்ளது,” என்று மோடி கூறினார்.

மக்களவைத் தேர்தலில் மேல்நோக்கிப் போரை எதிர்கொண்டு, வாக்காளர்களின் நம்பிக்கையைத் திரும்பப் பெறப் போராடிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி.,யினருக்கான இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை நீக்குவது, பெண்களுக்கு மத்திய அரசு வேலைகளில் 50% இடஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது போன்ற பின்தங்கிய மக்களைக் கவரும் வகையில் வாக்குறுதிகளின் தொகுப்பை அறிவித்தது. 

"நியா பத்ரா" என்ற தலைப்பில் 46 பக்க தேர்தல் அறிக்கை, விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம், பொது சுகாதாரத்திற்காக 25 லட்சம் ரூபாய் வரை பணமில்லா காப்பீடு மற்றும் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கட்டாய மற்றும் இலவச கல்வியை வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை குறிப்பிடுகிறது.

இதற்கிடையில், மகாத்மா காந்தி உட்பட பல சிறந்த ஆளுமைகள் காங்கிரஸுடன் தொடர்புடையவர்கள் என்று வலியுறுத்திய பிரதமர், “இன்று எஞ்சியிருக்கும் காங்கிரஸுக்கு தேசத்தின் நலனுக்கான கொள்கைகளோ அல்லது தேசத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையோ இல்லை” என்று கூறினார்.
தனது தாக்குதலை மேலும் கூர்மைப்படுத்திய மோடி, காங்கிரஸ் தொலைவில் கூட தெரியவில்லை என்றார்.

வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்த மோடி, “உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு மணி நேரமும் வேட்பாளர்களை மாற்ற வேண்டும், அதேசமயம் காங்கிரஸின் நிலைமை இன்னும் விசித்திரமானது. காங்கிரஸுக்கு வேட்பாளர்களே கிடைக்கவில்லை,” என்று கூறினார்.

"காங்கிரஸ் தனது கோட்டையாகக் கருதும் தொகுதிகளில் கூட, வேட்பாளர்களை நிறுத்துவதற்கான தைரியத்தைத் திரட்ட முடியவில்லை," என்று மோடி கூறினார், காங்கிரஸின் கோட்டையான அமேதி மற்றும் ரேபரேலி பற்றி மோடி வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார்.

"இந்தியா கூட்டணி உறுதியற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மற்றொரு பெயராக மாறியுள்ளது" என்று பிரதமர் மோடி கூறினார்.

தேர்தல் அட்டவணையின்படி, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி ஏழாவது கட்டத்துடன் முடிவடையும் வரை, உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் காலம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அவை சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்னோர், நாகினா (SC), மொராதாபாத், ராம்பூர் மற்றும் பிலிபித்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Pm Modi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment