மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க அரசுக்கு எதிராக வேலையில்லாத் திண்டாட்டத்தை முக்கியப் புள்ளியாக கட்டமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைப்பதற்கும் அதன் தாக்கத்தை தணிப்பதற்கும் தனது தேர்தல் அறிக்கையில் இதுவரை சொல்லப்படாத வாக்குறுதிகளை வழங்க உள்ளது. அதோடு இளைஞர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் அரசுத் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பான பிரச்சனைக்கும் தீர்வு காண உள்ளது.
காங்கிரஸின் சிந்தனைக் குழு, ஜெர்மனியின் மிகவும் பாராட்டப்பட்ட தொழிற்பயிற்சி மாதிரியைப் பார்த்து, அதை இந்தியாவுக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளது.
ஜெர்மானிய இரட்டைக் கல்வி மாதிரி (தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சி முறை) ஒரு தொழிற்கல்வி பள்ளியில் படிக்கும் போதே இளைஞர்கள் ஒரு நிறுவனத்தில் வேலையைப் பெறும் வகையில்சுமூகமான கல்வி-வேலைக்கு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
இந்த மாதிரி பயிற்சி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தனியார் துறையும் பொதுத்துறையும் இதில் ஈடுபட வேண்டும் என்பதால் இந்தியாவுக்கு ஏற்ப மாதிரியை உருவாக்குவது சவாலாக உள்ளது என்றும் குழு கூறியுள்ளது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழு, ஆவணத்தை தயாரிக்கும் கடைசி கட்டத்தில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் முன்மொழியக்கூடிய தொழிற்பயிற்சி மாதிரியானது லட்சிய இந்தியாவுடன், குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறது. தொழிற்பயிற்சிக் காலம் மற்றும் பயிற்சியின் போது உதவித்தொகை போன்ற விவரங்களில் கட்சி முழுமையாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
"மாடல் இளைஞர்களுக்கு வேலைக்கான தொடக்கத்தை கொடுக்கும்... அவர்கள் அதிக வேலைவாய்ப்பை பெறுவார்கள்... இது ஒரு வேலைக்கான உரிமை போன்றது. யார் வேண்டுமானாலும் ஒரு வருடத்திற்கு வேலை கேட்டு பெற்றுக் கொள்ளலாம்” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பல்வேறு மாநிலங்களில் மீண்டும் மீண்டும் வினாத்தாள் கசிவு காரணமாக பல முறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
தேர்வுத் தாள் கசிவு பிரச்சனையை எதிர்கொள்ள மத்திய அரசு அண்மையில் சட்டம் கொண்டு வந்தது. தேர்வுத் தாள் கசிவுக்கு கடுமையான தண்டனையை விதிக்கப்படுவதாக கூறியது.
வினாத் தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வுகள் ரத்து செய்யப்படுதல் போன்றவற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு பண இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட ஒரு திட்டத்தை காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த இரண்டையும் இணைத்து, இளைஞர்கள் ஸ்டார்ட்அப் மற்றும் பிசினஸ்களில் ஈடுபடுவதற்கு உதவும் வகையில் உதவி அல்லது சூழலை உருவாக்குவதற்கான வாக்குறுதியாக இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
வேலையின்மை தொடர்பாக காங்கிரஸ் மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
குவாலியரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், பாகிஸ்தான், வங்கதேசம், பூடான் போன்ற நாடுகளை விட இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது என்று கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/congress-manifesto-table-germany-style-apprenticeship-paper-leak-compensation-9193677/
இந்நிலையில் காங்கிரஸின் விமர்சனங்களை பா.ஜ.க தொடர்ந்து மறுத்து வருகிறது. ஜூலை 2022 முதல் ஜூலை 2023 வரையிலான காலகட்டத்திற்கான கடைசி கால தொழிலாளர் படை கணக்கெடுப்பில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது என்று பா.ஜ.க அரசு கூறியுள்ளது. கடந்த ஆண்டு 6.6 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக பா.ஜ.க கூறியுள்ளது.
அதேசமயம் 14 மாநிலங்கள் தேசிய சராசரியை விட அதிகளவில் வேலைவாய்ப்பின்மை கொண்டுள்ளதாக கணக்கெடுப்பு கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.