2025ம் ஆண்டு முதல் முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வேமுலா சட்டம் கொண்டுவரப்படும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது டெல்லியில் வைத்து அக்கட்சி வெளியிட்டது. மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். இந்நிகழ்வில் ப. சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :
- மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ‘அக்னிபாத்’ திட்டம் ரத்து செய்யப்படும்.
- அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும்.
- 100 நாட்கள் வேலை திட்டத்தின் ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ. 400 என உயர்த்தப்படும்.
- ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் ரத்து செய்யப்படும்.
- பி.எம். கேர்ஸ் நிதி ஊழல் குறித்து விசாரிக்கப்படும்
- தேர்தல் பத்திரம் ஊழல் குறித்த விசாரணை நடத்தப்படும்.
- மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
- NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக்கொள்ளலாம்.
- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 % இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
- 2025ம் ஆண்டு முதல் முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
- பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வேமுலா சட்டம் கொண்டுவரப்படும்.
- தேசிய கல்வி கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.
- ஜம்மு- காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து உடனடியாக வழங்கப்படும்.
- ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ரூ. 25 லட்சமாக அதிகரிக்கப்படும்.
- ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும்.
- அங்கன்வாடி பணியிடங்களை அதிகரித்து 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- ரயில்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணம் சலுகை மீண்டும் கொண்டுவரப்படும்.
- விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க எம்.எஸ்.பி (MSP) இன் சட்ட உத்தரவாதம் வழங்கப்படும்.
- விவசாயிகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
- பயிர் இழப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் கணக்கிற்கு நேரடியாக பணம் பரிமாற்றம் செய்யப்படும்.
- விவசாயிகளின் ஆலோசனையுடன் புதிய இறக்குமதி-ஏற்றுமதி கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.
- ஜி.எஸ்.டி இல்லாத விவசாயம் – விவசாயம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் ஜி.எஸ்.டி நீக்கம் செய்யப்படும்.
- நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம் – MNREGA போன்ற புதிய திட்டம் நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
- சமூக பாதுகாப்பு – வாழ்க்கை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான விபத்து காப்பீடு வழங்கப்படும்.
- சாவித்திரி பாய் புலே விடுதி – பணிபுரியும் பெண்களுக்கான இரட்டை விடுதி ஏற்படுத்தித் தரப்படும்.
- ஆட்சேர்ப்பு அறக்கட்டளை – 30 லட்சம் அரசு வேலைகள், அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும்.
- வேலை உறுதி – ஒவ்வொரு படித்த இளைஞருக்கும் ரூ. 1 லட்சம் தொழிற்பயிற்சி பெற உரிமை உண்டு.
- எஸ்சி, எஸ்டி/ஓபிசிக்கான இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படும்
- எஸ்சி/எஸ்டி மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- குத்தகை வன உரிமைச் சட்டத்தின் கீழ், தண்ணீர், காடு மற்றும் நிலத்திற்கான சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.