Advertisment

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இன்னும் உயிர் தியாகம் செய்கிறார்கள், 370-வது பிரிவுக்கு காங். எதிர்ப்பு சரி - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

ஜம்மு காஷ்மீரில் இன்னும் ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து வருகின்றனர், இது 370-வது பிரிவை திருத்தியதற்கு காங்கிரஸின் எதிர்ப்பு சரியானது என்பதை நிரூபிக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

author-image
WebDesk
Sep 18, 2023 16:27 IST
adhi

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இன்னும் உயிர் தியாகம் செய்கிறார்கள், 370-வது பிரிவுக்கு காங். எதிர்ப்பு சரி - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

2019-ம் ஆண்டில் 370-வது பிரிவை திருத்தியதற்கு காங்கிரஸின் எதிர்ப்பை நினைவு கூர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜம்மு காஷ்மீரில் இன்னும் ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து வருகின்றனர், இது காங்கிரசின் எதிர்ப்பு சரியானது என்பதை நிரூபிக்கிறது என்று கூறினார்.

Advertisment

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தில், மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் ஜம்மு காஷ்மீரில் ராணுவ அதிகாரிகளின் உயிரிழப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசை கடுமையாக சாடினார்.

2019-ம் ஆண்டில் 370-வது பிரிவை திருத்தியதற்கு காங்கிரஸின் எதிர்ப்பை நினைவு கூர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜம்மு காஷ்மீரில் இன்னும் ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து வருகின்றனர், இது காங்கிரசின் எதிர்ப்பு சரியானது என்பதை நிரூபிக்கிறது என்று கூறினார்.

இனி எதையும் எதிர்க்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இல்லை என்றும் காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

ஒரு பக்கம் ஜம்மு காஷ்மீர்  பற்றி எரிகிறது என்றும், மறுபுறம், மணிப்பூர் பற்றி எரிகிறது என்ரு கூறிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாட்டின் பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்தவரை இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும், “முன்னதாக, ராணுவ வீரர்கள் பணியின்போது தங்கள் உயிரை இழந்தபோது நாம் அமைதியாக இருந்தோம், இது இப்போது நடந்ததில்லை” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது உரையின் போது, நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு நேருவின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார்,  “நேரு எதிர்க்கட்சிகளின் குரலை சலைக்காமால் கேட்டார். அவர் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது கேலி செய்யவோ அல்லது திசைதிருப்பவோ இல்லை” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

“நாடாளுமன்ற ஜனநாயகம் பல நற்பண்புகளைக் கோருகிறது, அது திறன், வேலையில் பக்தி மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றைக் கோருகிறது என்று பண்டித ஜவஹர்லால் நேரு கூறியிருந்தார். ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும்போது நேர வரம்பை மீறும்போது சபாநாயகர் மணி கூட ஒலிக்கும், இது நாடாளுமன்றத்தை இழிவுபடுத்துவதற்கு யாரும் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை இது காட்டுகிறது. இது இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்தை வளர்ப்பதற்கு நேருவின் பங்களிப்பு” என்று காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார். 

மேலும், மக்களவையில் எம்.பி.க்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இப்போது பூஜ்ஜிய நேரம் அல்லது கேள்வி நேரத்தில் எம்.பி.க்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தின் புனிதம் தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார். மேலும்,  “75-ம் ஆண்டு அமிர்த கால சுதந்திர பெருவிழா எங்கிருந்து வந்தது என்று எனக்குப் புரியவில்லை” என்று கூறினார். 

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய உடனேயே பேசிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கடந்த 75 ஆண்டுகளில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகள் குறித்து பேசினார்.

மக்களவை நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நகரும், பழைய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்த விவாதம் பழைய வளாகத்தில் கடைசியாக நடைபெறும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#adhir ranjan chowdhury
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment