புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் கடல் அரிப்பு சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து பாராளுமன்றத்தில் பேசி துரிதமான ஒரு முடிவு எடுப்பேன் என புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் உறுதி அளித்தார்.
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியான சின்ன முதலாளி சாவடி, பெரிய முதலியார் சாவடி, காலாப்பட்டு. பிள்ளை சாவடி ஆகிய பகுதிகளில் கடல் அரிப்பு சீற்றத்தால் மீனவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை வலியுறுத்தி இந்த முறை பாராளுமன்றத்தில் பேசி துரிதமான ஒரு முடிவு எடுப்பேன் என புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் தெரிவித்தார் .
காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிகமான மீனவ மக்கள் வசிக்கின்றனர. அவர்கள் வாழ்வாதாரம் கடலை நம்பியிருக்கின்றனர். கடலோரப் பகுதியில் தங்கள் வீடுகளை கட்டி மீனவ குப்பத்தில் வசித்து வருகின்றனர் .சுவாமிக்கு பிறகு அடிக்கடி கடலரிப்பு ஏற்படுகிறது மேலும் கடல் நீர் சீற்றம் அதிகமாக உள்ளது இதனால் கடலோரப் பகுதியில் உள்ள வீடுகள் கடல் அரிப்பில் பாதிக்கப்படுகிறது.
நேற்று திடீரென்று கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மீனவர் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் .இதை அறிந்து இன்று புதுச்சேரி காங்கிரஸ் எம் பி வைத்திலிங்கம் மற்றும் காங்கிரஸ் முன்னால் அமைச்சரும் முன்னாள் தொகுதி எம்எல்ஏவுமான ஷாஜகான் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மீனவர் மக்களுக்கு ஆறுதல் கூறினர். போக நான் இந்த முறை பாராளுமன்றத்தில் பேசி மத்திய மீன்வளத்துறை அமைச்சர் இடம் புகார் தெரிவித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மீனவ மக்களுக்கு உறுதி அளித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”