Advertisment

ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முயற்சி: சில எதிர்க்கட்சிகள் தயக்கம்

இந்த நடவடிக்கையை முன்மொழிந்த மணீஷ் திவாரி வரைவு நோட்டீஸை தலைமையிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் இது குறித்து எதிர்க்கட்சி அணிகளிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் எதுவும் காங்கிரஸ் செய்ய விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi

Rahul Gandhi

மக்களவை எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அக்கட்சியின் எம்.பி மணீஷ் திவாரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று தலைமைக்கு பரிந்துரை செய்ததாக அறியப்படுகிறது.

Advertisment

இதையடுத்து திவாரியிடம் தலைமை நோட்டீஸ் தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டது. நோட்டீஸ் தயாரித்து அவர் நேற்று செவ்வாயன்று ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சி இன்னும் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மற்ற எதிர்க்கட்சிகள் களத்தில் வருமா என்பது குறித்து தலைமைக்கு உறுதியாக தெரியவில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. சில எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தீர்மானத்திற்கு தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. எதிர்க்கட்சி அணிகளிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் எதையும் செய்ய காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

மக்களவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின்படி, ஒரு உறுப்பினர் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவி நீக்குவதற்கான தீர்மானம் குறித்து நோட்டீஸ் கொடுக்க விரும்பினால் முதலில் அவர் பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்ப வேண்டும். அவரிடமிருந்து தகவல் பெற்றவுடன் இதற்கான அறிவிப்பு வணிகப் பட்டியலில் உள்ளிடப்படும். அதன் பிறகு 14 நாட்களுக்கு பிறகு தீர்மானம் குறித்து அறிவிப்பு வெளிவரும்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளதால், இந்த நடவடிக்கை, காங்கிரஸால் பின்பற்றப்பட்டாலும், நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து 14 நாட்களுக்குப் பிறகுதான் தீர்மானம் குறித்து பட்டியலிட முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. மேலும் சில தலைவர்கள் இந்த யோசனையை அரசியல் நோக்கத்திற்காக தொடரலாம் என்றனர்.

2020 ஆம் ஆண்டில், ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷை நீக்கக் கோரி 12 எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்தன. ஆனால் அப்போதைய அவைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு தீர்மானம் 14 நாட்கள் நோட்டீஸ் காலத்தை வழங்க வேண்டும் என்றும் அது “சரியான வடிவத்தில்” இல்லை என்றும் கூறி அதை நிராகரித்தார்.

கடந்த காலங்களில், சபாநாயகருக்கு எதிராக 3 முறை தீர்மானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் லோக்சபா சபாநாயகர் ஜி.வி மாவலங்கருக்கு எதிராக 1951-ம் ஆண்டு. சர்தார் ஹுகம் சிங் 1966, மற்றும் பல்ராம் ஜாகர் 1987 என 3 முறை தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment