காங்கிரஸ் கட்சியில் நிகழும் ஒவ்வொரு உட்கட்சிப்பூசலின் பின்னணியிலும் பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் மோடியும் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ ஆதிக்கம் செலுத்தி வருவதாக முதல்வர் மம்தா குற்றம்சாட்டியுள்ள நிலையில், தேசிய அளவிலான அரசியலில் நிகழும் பல்வேறு குளறுபடிகளின் பின்னணியில் மோடி அரசு உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்குவங்க மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 காங்கிரஸ் எம்பிக்களில் ஒருவர். 4 ஆண்டுகளுக்கும் மேலாக, மேற்குவங்க மாநில காங்கிஸ் கட்சி தலைவராக உள்ளார். அதிர்ஷ்ட வாய்ப்பாக, காங்கிரஸ் மக்களவை தலைவர் பதவியையும் தட்டிச்சென்றார். மேற்குவங்க மாநிலத்தில், திரிணமுல் காங்கிரஸ், சிபிஎம், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழுவின் தலைவராக உள்ள சவுத்ரி, அவ்வப்போது, பாரதிய ஜனதாவின் குளறுபடிகளை வெளிஉலகுக்கு தெரிவித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சி தலைமை தொடர்பாக 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியது குறித்து?
Advertisment
Advertisements
காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியில் காந்தி குடும்பத்தை சேராத நரசிம்மராவ்., சீதாராம் கேசரீ உள்ளிட்டோர் இருந்துள்ளனர். இதை, காங்கிரஸ் கட்சியும் வரவேற்கிறது. இக்கட்சியில், காந்தி குடும்பத்தை சேராதவர்களால், எவ்வித பெரிய மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. அவர்களால் இழந்த இடத்தை, சோனியா காந்தி தலைமைப்பொறுப்பேற்ற பின்னரும் மீட்டெடுக்க முடியவில்லை என்பதே யதார்த்தம். இந்த உண்மையை அனைவரும் உணர வேண்டும்.
நான் இந்த தோல்விக்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்லவில்லை, ஒட்டுமொத்த தோல்வி என்றே கருதுகிறேன். காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைமையில் கட்சி சந்தித்த தோல்விகளை, மற்ற தலைவர்கள், சோனியா மற்றும் ராகுல் காந்தியின் தலையில் சுமத்தி அவர்கள் எளிதாக தப்பித்துக்கொள்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாதத்தை, வலுப்படுத்த பாரதிய ஜனதா கட்சிக்கு நல்வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றாக சிறந்து செயல்பட சோனியா காந்தியால் மட்டுமே முடியும்.
கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி உடன் நல்லுறவு பேணி வரும் நிலையில், இதுபோன்ற கடிதத்தை அவர்கள் ஏன் எழுதினர் என்பது தெரியவில்லை செயற்குழு கூட்டத்தில் அனைத்து விவகாரங்களும் விவாதிக்கப்பட உள்ளன. இந்தநேரத்தில் இதுபோன்ற கடிதங்கள் தேவையில்லாதது. இது கட்சியின் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவி புரியாது. இது எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கே சாதகமாக அமையும்.
மோடியின் புகழால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. மோடி, மக்களிடையே சிறந்த முறையில் தொடர்பு வைத்துக்கொண்டிருப்பதால், அவரால் மக்களின் மனதில் எளிதாக இடம்பெற முடிகிறது. ஆனால், அவரின் செயற்திறன் குறித்த அறிக்கையை பார்த்தால், முடிவு ஜீரோ ஆகவே உள்ளது. 6 ஆண்டுகளாக அவர் பிரதமராக உள்ளார், ஆனால் அவர் ஊடகங்களை கண்டு பயப்படுவதற்கு காரணம், அவரது சுயரூபம் வெளிப்பட்டுவிடும் என்ற காரணத்தினாலேயே, காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற்று, தனது பழைய நிலையை அடையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil