காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்திக்கு கட்சி நிர்வாக ரீதியாக உதவி செய்வதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அகில இந்திய பொதுச் செயலாளர்களும் மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நிரந்தரமான முழு நேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திறந்த கடிதம் எழுதினர். அப்போது, காங்கிரஸ் கட்சியில் புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி, தலைவர் சோனியா காந்திக்கு உதவ ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செய்லாளர்களையும் மாநிலங்களுக்கு புதிய மேலிட பொறுப்பாளர்களையும் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 24ம் தேதி நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி கேட்டுக்கொண்டபடி, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை நிர்வகிக்க காங்கிரஸ் தலைவருக்கு உதவி செய்ய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஏ.கே.ஆண்டனி, அஹமது படேல், அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு அடுத்த காங்கிரஸ் காரியக் கமிட்டி அமர்வு வரை தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Congress sets up a special committee to assist Interim President Sonia Gandhi in operational and organisational matters pic.twitter.com/La4DKEmfLH
— ANI (@ANI) September 11, 2020
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அகில இந்திய பொதுச் செயாலாளர்களையும் மாநிலங்களுக்கு புதிய காங்கிரஸ் மேலிட பொருப்பாளர்களையும் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். அதன்படி, மூத்த காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் மத்தியப் பிரதேச மாநில மேலிட பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல மூத்த காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் ராவத் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் பஞ்சாப் மாநில மேலிட பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். உம்மன் சாண்டி அகில இந்திய பொதுச் செயலாளராகவும் ஆந்திரப் பிரதேச மாநில மேலிட பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். தாரிக் அன்வர் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் கேரளா மாநிலம் மற்றும் லக்ஷதீப் யுனியன் பிரதேசத்தின் மேலிட பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தி வத்ரா அகில இந்திய பொதுச் செயலாளராகவும் உத்தரப் பிரதேச மாநில மேலிட பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அகில இந்திய பொதுச் செயலாளராகவும் கர்நாடகா மாநில மேலிட பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜிதேந்திர சிங் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் அஸ்ஸாம் மேலிட பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அஜய் மக்கென் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் ராஜஸ்தான் பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். கே.சி.வேணுகோபால் அமைப்பு பொதுச் செயலாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Congress appoints general secretaries and in-charges of All India Congress Committee
Gulam Nabi Azad, Ambika Soni, Moti Lal Vohra, Luzenio Falerio, Mallikarjun Khadge dropped from the list of general secretaries pic.twitter.com/DvD9gjcPYL
— ANI (@ANI) September 11, 2020
அதே போல, அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டி, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் பவன் குமார் பன்சால், நிர்வாக மேலிட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஜனி பாட்டீல், ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸுக்கு மேலிட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பி.எல்.புனியா சட்டீஸ்கர் மாநில மேலிட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.பி.என். சிங் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சக்திசின் கோஹில் டெல்லி, பீகார் மாநிலங்களின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் சங்கரராவ் சதவ் குஜராத் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும், தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் அண்ட் டையு ஆகிய யூனியன் பிரதேசங்களின் மேலிட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் ஷுக்லா இமாச்சலப் பிரதேச மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜிதின் பிரசாதா மேற்கு வங்க மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தினேஷ் குண்டு ராவ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கோவா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் தெலங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராவும், தமிழக எம்.பி செல்லகுமார் ஒடிசா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஹெச்.கே.பாட்டீல், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும், தேவேந்தர் யாதவ் உத்தரக்காண்ட் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் விவேக் பன்சால் ஹரியானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் மனிஷ் சத்ரத் அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பக்த சரண் தாஸ் மிஸோராம் மற்றும் மணிப்பூர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் குல்ஜித் சிங் நகரா சிக்கிம், நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.