Manoj C G
Congress Party President Rahul Gandhi resigns : 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி. 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு தன்னுடைய பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக யார் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பதை ஆராய்ந்து வருகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி. மேலும் படிக்க : உருக்கமான அறிக்கையுடன் விலகிய ராகுல் காந்தி!
Congress Party President Rahul Gandhi resigns : புதிய தலைவராக யாருக்கு வாய்ப்பு உள்ளது?
தலித் தலைவர்கள் சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜூன கார்கே, மற்றும் முகுல் வாஸ்னிக் முதற்கொண்டு உயர்சாதி வகுப்பினைச் சேர்ந்த அசோக் கெஹ்லாத், ஆனந்த் ஷர்மா, இளைஞர்கள் சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா என்ற பல்வேறு முகங்களில் காங்கிரஸை விளிம்பில் இருந்து தூக்கி நிறுத்தும் முகம் எந்த முகமாக இருக்கும் என்ற கேள்வி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
காரிய கமிட்டி, ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ராகுலே தலைவராக இருப்பார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மோதிலால் வோரா புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றனர். ஆனால் அவர் இடைக்கால தலைவராகவே செயல்படுவார்.
காங்கிரஸ் கட்சி தற்போது என்ன செய்ய உள்ளது?
இன்று ராகுல் காந்தி மீது பதியப்பட்டுள்ள டிஃபெமேசன் வழக்கிற்காக பிவாந்தியில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இவர் திரும்பி வந்த பின்பு தான் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு ஒரு முடிவு எட்டப்படும்.
காங்கிரஸ் கட்சியில் அவசர நிலை காரணமாகவோ, இறப்பினாலோ, அல்லது தலைவர் ராஜினாமாவாலோ காங்கிரஸ் தலைமையிடம் காலி ஆகும் பட்சத்தில், அந்த கட்சியின் மூத்த பொதுச்செயாலாளர் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக திகழ்வார். இந்த நடப்பானது புதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் வரை இருக்கும்.
அவருடைய நான்கு பக்க ராஜினாமா கடிதத்தில் பல்வேறு முக்கிய விசயங்களை அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அதில் ”மிக கடினமான சில முடிவுகளை கட்சி எடுத்தே ஆக வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது”, ”2019 பொதுத்தேர்தல் தோல்விக்கு நிறைய பேர் பொறுப்பேற்க வேண்டும்”, அதிகாரத்தை கைப்பற்ற யாரும் அதிகாரத்தை தியாகம் செய்வதில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
மூன்று வழிகளில் எதை தேர்வு செய்யப் போகிறது காங்கிரஸ்?
காங்கிரஸ் கையில் மூன்று முக்கியமான வழிகளால் மட்டுமே புதிய தலைவரை சுலபமாக தேர்வு செய்யமுடியும். சி.பி.எம். கட்சியைப் போன்றே முதல்வர் பதவியில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுபேற்கலாம். சில வொர்க்கிங் பிரசிடெண்ட்டுகளை தேர்வு செய்து கொண்டு கட்சிப் பணிகளை விரைவுபடுத்தலாம்.
காங்கிரஸ் மற்றும் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான ஒருவரை தலைவராக தேர்வு செய்யலாம்.
இவை இரண்டும் சாத்தியப்படாத வகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்தல் மூலமாக தேர்வு செய்யலாம். ஆனால் இதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பல்வேறு குழப்பங்களை கட்சி சந்தித்திருக்கின்ற நிலையில் இது மேலும் கட்சியை பிளவடையச் செய்யும் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.