scorecardresearch

டெல்லி ரகசியம்: லக்கிம்பூர் விவகாரமும் குடியரசுத்தலைவர் உடனான சந்திப்பும்… காங்கிரஸின் திட்டம் என்ன?

குடியரசுத் தலைவரை சந்தித்து பேச காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. அப்போது, மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்திட கோரிக்கை வைக்கப்படும் என தெரிகிறது

டெல்லி ரகசியம்: லக்கிம்பூர் விவகாரமும் குடியரசுத்தலைவர் உடனான சந்திப்பும்… காங்கிரஸின் திட்டம் என்ன?

லக்கிம்பூரில் விவசாயிகளின் மீது காரை ஏற்ற கொலை செய்த வழக்கில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஷ்ரா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்விவகாரத்தில் தொடர்புடைய மத்திய இணையமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இவ்விவகாரம் குறித்து குடியரசுத் தலைவரை சந்தித்து பேச காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.அப்போது, அவரிடம் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்திட கோரிக்கை வைக்கப்படும் என தெரிகிறது.ராகுல் காந்தி, ஏ கே ஆண்டனி, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோர் அடங்கிய குழுவினர், குடியரசுத் தலைவரை சந்தித்து பேச அனுமதிகேட்டு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.

சிகரத்தை அளவிட்ட ஐடிபிபி குழு

ஐடிபிபி ஐஜி லாரி டோர்ஜி தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினர் கிழக்கு லடாக்கில் 20 ஆயிரம் மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அளவிட்டு அசத்தியுள்ளனர்.  செப்டம்பர் 28 ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய இவர்கள், அக்டோபர் 6 ஆம் தேதி அதன் உச்சத்தை அடைந்து, இந்திய கொடியை நாட்டினர்.

இந்த மலையேறுபவர்கள் குழுவில் ஐடிபிபி மற்றும் லடாக் காவல் துறையைச் சேர்ந்த நான்கு பெண்களும் உள்ளனர். 2019 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த லடாக் ஐடிபிபி தலைமை காவலர் Nurbu Wangdus-ஐ நினைவுக்கூரும் வகையில், இந்த சிகரத்திற்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளனர்.


சமூக இடைவெளியுடன் கட்சி கூட்டம்
கொரோனா ஊரடங்கு நெறிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் கட்சியினர் பெரியளவில் கூட்டத்தை நடத்திட திட்டமிட்டு வருகின்றனர். பாஜக தனது தேசிய நிர்வாகக் கூட்டத்தை நவம்பர் 7 ஆம் தேதி அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் செயற்குழு அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இருப்பினும், கூட்டம் நடைபெறும் முறையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என கருதப்படுகிறது. அண்மையில், ஏகேஜி பவனில் சிபிஐ கட்சி கூட்டம் நடைபெற்றது. எப்போதும், ரவுண்ட் மேசையில் சுற்றி அமரும் உறுப்பினர்கள், இம்முறை தனி தனியாக ரெக்டங்கிலே வடிவத்திலிருந்த மேசையில் நெருக்கு நேர் அமர்ந்திருந்தனர். கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றப்படி பெரிய ஹாலில் சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Congress planning to meet president regarding lakhimpur case