சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ராவுடன் மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாட்டில் உள்ளதால் நடைபெற்றது காணொலி வழியாக நடந்தது.
காங்கிர்ஸ் கட்சியின் உயர்மட்ட அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டி ஞாயிற்றுக்கிழமை கூடியது. அதில் அடுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை முடிவு செய்தது. காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடத்தப்படும் என்றும், அக்டோபர் 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்த கூட்டம் நடைபெற்றது. அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ராகுல் காந்தி மற்றும் அவரது செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுபப்தற்கு செப்டம்பர் 22 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி செப்டம்பர் 24 மற்றும் 30 க்கு இடையில் இருக்கும் இருக்கும் என்றும் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 8 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி, மருத்துவப் பரிசோதனைக்காக தனது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தியுடன் வெளிநாட்டில் இருக்கிறார். அதனால், காங்கிரஸ் காரியக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சோனியா காந்தி காணொலி வழியாக பங்கேற்றார். ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை சோனியா காந்திக்கு பதிலாக புதிய தலைவரை கட்சி தேர்ந்தெடுக்க உள்ளது.
குலாம் நபி ஆசாத் விலகிய நிலையில், ஜி-23 தலைவர்கள் ஆனந்த் சர்மா மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களாக உள்ளனர். ஆனந்த் சர்மா சனிக்கிழமை குலாம் நபி ஆசாத்தை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவருடன் உரையாடினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”