Advertisment

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியாவிடம் மன்னிப்பு கேட்ட கெலாட், போட்டிக்கு வந்த கார்கே

சசி தரூர் மற்றும் திக்விஜய சிங் தவிர, தலைமையின் மறைமுகமான ஆசீர்வாதத்துடன் மூன்றாவது வேட்பாளராக ஒருவர் வர வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
congress

சோனியா காந்தியை சந்தித்த பிறகு, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுடன். (Express photo by Anil Sharma)

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததை அடுத்து, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மூன்றாவது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

Advertisment

"சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு" வெளியேறுவதற்கான தனது முடிவை அறிவிப்பதற்கு முன், கெலாட் வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சுமார் 90 நிமிடங்கள் சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை தனது அணி நடந்து கொண்ட மீறலுக்கு அவர் சோனியாவிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்தது.

கெலாட்டின் விலகல் மற்றும் மன்னிப்புக் கோரிக்கையைத் தொடர்ந்து, காந்தி குடும்பம் அதன் பெருமையைக் காப்பாற்றிக் கொள்வதாகப் பார்க்கப்படுகிறது. சசி தரூர் மற்றும் திக்விஜய சிங் தவிர, தலைமையின் மறைமுகமான ஆசீர்வாதத்துடன் மூன்றாவது வேட்பாளராக ஒருவர் வர வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், கார்கே போட்டியில் புதிய முகமாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கார்கே தேர்தலில் போட்டியிடுவதில் தயக்கம் காட்டவில்லை, ஆனால் சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி மட்டுமே அவர் செயல்படுவார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் முன்னதாக தெரிவித்திருந்தன.

பிரியங்கா காந்தி வதேராவை போட்டியிட வைக்க அழுத்தம் கொடுப்பதாக கட்சி வட்டாரங்களில் சலசலப்பு இருந்தது. வியாழக்கிழமை பிற்பகுதியில், சோனியா, பிரியங்காவின் வீட்டிற்கு காரில் சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் இருந்தார். இதற்கிடையில், கட்சியின் ஜி 23 இன் சில தலைவர்கள் சோனியாவை சந்தித்தனர், தலைமை "டம்மி" அல்லது "ப்ராக்ஸி" வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் அவர்களில் ஒருவர் போட்டியிடுவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று அவர்கள் கூறியதாக தெரிகிறது.

எவ்வாறாயினும், கட்சித் தலைவரிடம் மன்னிப்புக் கேட்டதாக கெஹ்லாட் கூறியதும் அந்த நாளில் ஆதிக்கம் செலுத்தியது- பொதுவெளியில் ஒரு முதல் மந்திரியின் அபூர்வ ஒப்புதல் இது.  ராஜஸ்தான் குறித்து ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதை அடுத்து, கெலாட்டின் பரம மாநில எதிரியான சச்சின் பைலட் சோனியா காந்தியை சந்தித்தார்.

ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கிளர்ச்சிக்குப் பிறகு, காந்தி குடும்பத்தின் உயர் கட்டளை மற்றும் மேலாதிக்கத்தின் அதிகாரம் ஆபத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

கெலாட்டை டெல்லிக்கு வரச் செய்து, சோனியா காந்தியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு, ராஜஸ்தானில் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதை சோனியாவிடமே விட்டுவிடுவதன் மூலம், உயர் கட்டளை தனது அதிகாரத்தை மீண்டும் நிறுவியுள்ளது என்று கட்சியின் தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

ஆதாரங்களின்படி, கெலாட் சொன்னதைச் சொல்லும்படி கூறப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. மேலும் ராஜஸ்தான் விவகாரத்தில் சோனியா காந்தி முடிவெடுப்பார் என்றும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மூத்த தலைவர் திக்விஜய சிங் வேட்புமனுப் படிவங்களை வாங்கி, கடைசி நாளான வெள்ளிக்கிழமை தனது ஆவணங்களைத் தாக்கல் செய்வதாக அறிவித்தார். மக்களவை எம்பி சசி தரூரும் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

அவர்களது சந்திப்பின் போது, ​​ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்வுகளால் தானும் வேதனையடைந்ததாக, கட்சிப் பதவிக்கு தன்னைப் போட்டியிடச் சொன்ன சோனியாவிடம் கெலாட் கூறினார். பின்னர், சோனியாவுடனான மற்றொரு சந்திப்பிலிருந்து வெளிவந்த வேணுகோபாலிடம், ராஜஸ்தான் குறித்து கேட்டபோது, ​​இது குறித்து காங்கிரஸ் தலைவர் முடிவு செய்வார் என்று கெலாட் ஏற்கனவே கூறியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ஓரிரு நாட்களில் முடிவெடுப்பார் என்றார்.

சோனியாவுடனான ஒரு மணி நேர சந்திப்புக்குப் பிறகு சச்சின் பைலட், ராஜஸ்தானில் நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவாகப் பேசினோம். நான் என் உணர்வுகளை, எனது கருத்தை சோனியா காந்தியிடம் தெரிவித்துள்ளேன். ராஜஸ்தானில் 2023 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே எங்கள் நோக்கம், அதற்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், என்று அவர் கூறினார்.

ராஜஸ்தானுக்கான தலைமையின் திட்டம் குறித்து கேட்டதற்கு, ராஜஸ்தானைப் பொறுத்தவரை எந்த நல்ல முடிவுகளை எடுக்க வேண்டுமோ அதை காங்கிரஸ் தலைவர் எடுப்பார் என்றார்.

ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டத்தில் அவருக்கு விசுவாசமான சுமார் 90 எம்.எல்.ஏ.க்கள் விலகி, தனியாக கூட்டத்தை நடத்தியதற்கு அவர் "தார்மீகப் பொறுப்பை" ஏற்பதாக கெலாட்டின் அறிக்கையிலிருந்து கட்சிக்குள் பல விளக்கங்கள் பெறப்படுகின்றன. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு வரி தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது.

சோனியாவுடனான சந்திப்பிற்குப் பிறகு, கெலாட் இந்திரா காந்தியின் காலத்திலிருந்து தனது வாழ்நாள் முழுவதும் கட்சியின் விசுவாசமான சிப்பாயாக இருந்ததாக கூறினார். மத்திய அமைச்சர், பிசிசி தலைவர், ஏஐசிசி பொதுச் செயலாளர் என எப்பொழுதும் எனக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. மேலும் சோனியா ஆசியுடன் மூன்றாவது முறையாக முதல்வர் ஆனேன்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் "நம் அனைவரையும் உலுக்கியது" என்று கெலாட் கூறினார். “நான் முதலமைச்சராக இருக்க விரும்புகிறேன் என்று நாடு முழுவதும் ஒரு செய்தி சென்றது, அதனால்தான் இதெல்லாம் நடந்தது. நான் சோனியாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன்... இதற்காக வருந்துகிறேன்.

கைவிடப்பட்ட கட்சியின் கூட்டத்தில், ஒரு எளிய தீர்மானம்... ஒரு வரி தீர்மானம்... முதல்வர் குறித்து முடிவெடுக்கும் போது, ​​அந்த ஒரு வரி தீர்மானத்தை (காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளித்தல்) நிறைவேற்றுவது நமது பாரம்பரியம். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை.

நான் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் மற்றும் முதலமைச்சர். என்னால் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை, காரணங்கள் எதுவாக இருந்தாலும், அது எனது தார்மீக பொறுப்பு… முதன்முறையாக நமது பாரம்பரியத்துக்கு ஏற்ப தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லை. என் வாழ்நாள் முழுவதும் அதற்காக நான் எப்போதும் வருந்துவேன்... அதை சோனியாஜியிடம் சொன்னேன்.

மேலும், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து கெலாட் கூறுகையில், இத்தகைய சூழலில் நான் போட்டியிட மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். அதுதான் என் முடிவு. அவர் முதலமைச்சராக நீடிப்பாரா என்பது குறித்து சோனியா காந்தி முடிவு எடுப்பார் என்றார்.

பின்னர், G 23 இன் தலைவர்கள்  (அவர்களில் யாரும் தரூரின் வேட்பு மனுவில் கையெழுத்திடவில்லை) மூன்றாவது வேட்பாளரைக் கண்டுபிடிப்பதற்காக தலைமையின் பரபரப்பான கூட்டங்களுக்கு மத்தியில் ஆனந்த் சர்மாவின் இல்லத்தில் சந்தித்தனர். இதில் பிருத்விராஜ் சவான், மணீஷ் திவாரி மற்றும் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களில் ஒருவர் போட்டியிடுவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று குழுவின் வட்டாரங்கள் தெரிவித்தன. இரவு தாமதமாக, ஷர்மா, கெலாட் தங்கியிருக்கும் ஜோத்பூர் இல்லத்திற்குச் சென்று அவருடன் ஒரு சந்திப்பு நடத்தினார்.

மற்ற சாத்தியமான போட்டியாளர்களில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sonia Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment