Advertisment

ராகுலுக்கு எதிராக சாதியக் கருத்து; அனுராக் தாக்கூர் கருத்தை பகிர்ந்த மோடி மீது உரிமை மீறல் தீர்மானம்... காங். ’மூவ்’

உரிமை மீறல் தீர்மானத்திற்கான நோட்டீசை பஞ்சாப் முன்னாள் முதல்வரும், ஜலந்தர் தொகுதியின் தற்போதைய எம்.பி-யுமான சரண்ஜித் சிங் சன்னி தாக்கல் செய்தார்.

author-image
WebDesk
New Update
modi rahul anurag

பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூர் (PTI Photo)

அவை நடவடிக்கைகளில் இருந்து சபாநாயகரால் நீக்கப்பட்ட கருத்துகளின் ஒரு பகுதியை சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மானத்தை புதன்கிழமை முன்வைத்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Congress moves Privilege Motion against PM Modi for sharing Anurag Thakur’s ‘expunged’ caste remarks against Rahul Gandhi

மக்களவையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) நடந்த விவாதத்தின் போது, ​​சாதிவாரி கணக்கெடுப்புக்காக காங்கிரஸ் எம்.பி எழுப்பிய விவாதத்தின்போது, ​​ராகுல் காந்தியின் ஜாதி குறித்து பா.ஜ.க தலைவர் அனுராக் தாக்கூர் கூறிய கருத்துகளின் ஒரு பகுதியை பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த உரிமை மீறல் தீர்மானத்திற்கான நோட்டீசை பஞ்சாப் முன்னாள் முதல்வரும், ஜலந்தர் தொகுதியின் தற்போதைய எம்.பி-யுமான சரண்ஜித் சிங் சன்னி தாக்கல் செய்தார். இந்த உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ் விதி 222ன் கீழ், சபாநாயகரின் ஒப்புதலுடன், உறுப்பினர் அல்லது சபை அல்லது குழுவின் உரிமை மீறல் சம்பந்தப்பட்ட கேள்வியை எழுப்ப ஒரு உறுப்பினருக்கு அதிகாரம் அளிக்கிறது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், சன்னி, “ஜூலை 30, 2024-ல் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்த சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள், சபாநாயகர் மற்றும் மக்களவையால் அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டது. அவை நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்பட்ட கருத்துகள் தொடர்பானவை இணைக்கப்பட்டுள்ளன” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி,‘எக்ஸ்’ பக்கத்தில் “முழு உரையை வீடியோவுடன்” வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எக்ஸ் பக்கத்தில் அனுராக் தாக்கூரின் உரையைப் பகிர்ந்து கொண்ட, பிரதமர் மோடி எழுதுகையில், “என்னுடைய இளம் மற்றும் ஆற்றல் மிக்க சக உறுப்பினரான அனுராக் சிங் தாக்கூரின் இந்த உரை அவசியம் கேட்க வேண்டும். உண்மை மற்றும் நகைச்சுவையின் சரியான கலவை, இந்தியா கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்துகிறது.

அனுராக் தாக்கூர் தன்னை அவமதித்ததாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, பா.ஜ.க எம்.பி மன்னிப்பு கோர வேண்டும் என விரும்பவில்லை என்று கூறினார்.  “உங்களால் முடிந்தவரை என்னை துஷ்பிரயோகம் செய்யுங்கள் அல்லது அவமானப்படுத்துங்கள். ஆனால், இந்த நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

அந்த உரையில் உள்ள மற்ற ஆட்சேபகரமான நீக்கப்பட்ட வார்த்தைகளும் பிரதமரால் பதிவிடப்பட்டுள்ளதாக கடிதத்தில் காங்கிரஸ் எம்.பி சரண்ஜித் சிங் சன்னி கூறியுள்ளார்.

“கௌல் & ஷக்தேர் (7வது பதிப்பு) நாடாளுமன்ற நடைமுறை மற்றும் செயல்பாட்டில்  வகுத்துள்ளபடி, இது நன்கு நிறுவப்பட்டுள்ளது:  “சபாநாயகர் ஒரு உத்தரவின் வார்த்தைகள், கருத்துகள் அல்லது நடவடிக்கைகளின் ஒரு பகுதியை நீக்குவது போன்றது. வார்த்தைகள்/கருத்துகள் அல்லது நடவடிக்கைகளின் அந்த பகுதி ஒருபோதும் பேசப்படவில்லை. நீக்கப்பட்ட வார்த்தைகள் அல்லது வெளிப்பாடுகளை வெளியிடுவது உரிமை மீறல் ஆகும்” என்று ஜலந்தர் எம்.பி சரண்ஜித் சிங் சன்னி கூறினார்.

சமூக ஊடகங்களில் பிரதமர், “அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்களைப் பதிவிடுவது, உரிமை மீறல் மற்றும் சபையை அவமதிக்கும் செயல்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனவே, பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை முன்வைக்க நான் கோரிக்கை வைக்கிறேன், தயவுசெய்து எனது நோட்டீஸை ஏற்றுக்கொண்டு அதை நகர்த்துவதற்கு என்னை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று சரண்ஜித் சிங் சன்னி வலியுறுத்தியுள்ளார்.

அனுராக் தாக்கூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால், அவை நடவடிக்கைகள் புதன்கிழமை பாதிக்கப்பட்டன. ராகுல் காந்தியின் கோரிக்கையை எதிரொலிக்கும் வகையில் மக்களவையிலும் “எங்களுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்” என முழக்கமிட்டனர். இது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை காங்கிரஸ் மீது வசைபாடத் தூண்டியது, எதிர்க்கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி, “நாடாளுமன்றத்தில் யாரிடமும் சாதி கேட்க வேண்டாம். இது வேண்டுமென்றே அவமதிக்க செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அநாகரீகமான விஷயங்களை பிரதமர் கூட ஆதரிக்கக் கூடாது.” என்று பேசினார்.

“எப்போது, ​​​​எந்த விஷயங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை அவர் (மோடி) அறிந்திருக்க வேண்டும். இதுபோன்ற அநாகரீகமான செயல்களையும், அவர்களுக்கு ஆதரவாக நரேந்திர மோடியின் ட்வீட்டையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment