காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் இன்று. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜூன் 19ம் தேதியான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள். இன்றுடன் அவருக்கு 48 வயதாகிறது. ராகுலின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல கட்சி தலைவர்களும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,“காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ எனது பிராத்தனை செய்கிறேன்” என அதில் குறிபிட்டுள்ளார்.

அரசியல் களத்தில் எதிர் துருவமான ராகுல் காந்திக்கு, பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளதை பலரும் ஒரு நல்ல விஷயமாக பார்க்கின்றனர்.

×Close
×Close