மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) செயலகத்தில் ஒரு முக்கிய மறுசீரமைப்பை செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முக்கிய மாநிலப் பொறுப்பிலிருந்து பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
வதேராவை விடுவித்தார். அதே சமயம் சச்சின் பைலட்டை சத்தீஸ்கர் மாநில பொதுச் செயலாளராக நியமித்து உத்தரவிட்டார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார வியூகம் மற்றும் விஷயங்களை வடிவமைக்க
முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தலைமையில் ஒரு அறிக்கைக் குழுவை கட்சி நியமித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த நியமனங்கள் வந்துள்ளன. வியாழன் அன்று நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) கூட்டத்தில், பல கட்சித் தலைவர்கள் கட்சிக்கு அவசர உணர்வைக் காட்டவும், பொதுத் தேர்தலுக்குத் தயாராகவும் அழைப்பு விடுத்தனர்.
வேறு எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் பிரியங்கா பொதுச் செயலாளராகவே தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைப்பு ரீதியாக அவருக்கு பெரிய பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலப் பொதுச் செயலாளராக பைலட் பதவி உயர்வு பெற்றதும், இந்த வார தொடக்கத்தில் அமைக்கப்பட்ட தேசியக் கூட்டணிக் குழுவில் உறுப்பினராக அசோக் கெலாட் சேர்க்கப்பட்டிருப்பதும், ராஜஸ்தானில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் புதிய முகத்தைத் தேடும் என்று அர்த்தம்.
ஜார்கண்ட் மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்த அவினாஷ் பாண்டே, பிரியங்காவுக்குப் பதிலாக உ.பி-ன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி.யின் பொறுப்பாளராக பிரியங்கா நீடிக்க விரும்பவில்லை என்றும் தெரிகிறது.
அங்கு கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை மையமாக வைத்து பிரியங்கா தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். ஆனால் அவை வெற்றி பெறவில்லை. இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்ததால், அக்கட்சியின் செயல்பாடு படுமோசமாக இருந்தது.
கட்சியில் மேலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பல மாநிலங்களுக்கு பொறுப்பாக இருந்த முகுல் வாஸ்னிக் தற்போது குஜராத்தின் பொறுப்பாளராகவும், குமாரி செல்ஜா சத்தீஸ்கரில் இருந்து உத்தரகாண்டிற்கும், தேவேந்திர யாதவ் உத்தரகாண்டில் இருந்து பஞ்சாபிற்கும், மாணிக்கம் தாகூர் கோவாவில் இருந்து ஆந்திராவுக்கும், மோகன் பிரகாஷ் இந்த முறையும் பீகார் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பைலட்டைத் தவிர, புதிததாக பொது செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் குலாம் அகமது மிர், மேற்கு வங்கம், ஜார்கண்ட் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தீபா தாஸ்முன்சிக்கு கேரளா, லட்சத்தீவுகள் மற்றும் கூடுதல் பொறுப்பாக தெலங்கானாவும் வழங்கப்பட்டுள்ளது. தாஸ்முன்சியின் இந்த பொறுப்புகளால் அவர் இந்த முறை மக்களவைத் தேர்தலில் ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மாட்டர் என்று கூறப்படுகிறது.
தகவல் தொடர்புத் துறையின் பொதுச் செயலாளராக ஜெய்ராம் ரமேஷ் தொடர்வார், மேலும் AICC பொதுச் செயலாளராக (அமைப்பு) கே.சி. வேணுகோபால் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டனர்.
அசாம் மாநில பொதுச் செயலாளராக இருந்த ஜிதேந்திர சிங்குக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு ஆச்சரியமான முடிவு என்னவென்றால், மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா மகாராஷ்டிராவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார், ஆனால் பொதுச் செயலாளராக அல்ல. வாஸ்னிக் தவிர, 12 பொதுச் செயலாளர்களில் பெரும்பாலானோர், இவரை விட இளையவர்கள்.
சிக்கிம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருந்த அஜோய் குமாருக்கு பதிலாக ஒடிசாவின் தலைவராகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு கூடுதல் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ரஜனி பாட்டீலுக்குப் பதிலாக குஜராத் பிசிசியின் முன்னாள் தலைவர் பரத்சிங் சோலங்கிக்கு ஜம்மு காஷ்மீர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பொறுப்பாளராக சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா நீடிப்பார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/congress-aicc-rejig-priyanka-gandhi-sachin-pilot-lok-sabha-elections-9080528/
கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கானாவின் பொறுப்பாளராக இருந்த மகாராஷ்டிர தலைவர் மாணிக்ராவ் தாக்ரே, கோவா, டாமன் & டையூ மற்றும் தாத்ரா & நகர் ஹவேலிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (NSUI) தலைவராக இருந்த கோவா காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிரிஷ் சோடங்கருக்கு திரிபுரா, சிக்கிம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பில் பொதுச் செயலாளராக இருந்த தாரிக் அன்வர் மற்றும் மாநில பொறுப்பாளர்களாக இருந்த பக்த சரண் தாஸ், ஹரிஷ் சவுத்ரி, ரஜனி பாட்டீல் மற்றும் மணீஷ் சத்ரத் ஆகியோர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.