ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இம்மாத இறுதியில் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை பல மாநிலங்கள் வழியாக நடைபயணம் சென்று ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்த நடைபயணம் தொடங்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமூக செயல்பாட்டாளர்கள், நடிகர்கள் ராகுலுடன் யாத்திரை சென்று ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் பல்வேறு மதத் தலைவர்களும் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. இந்நிலையில் ராகுல் யாத்திரையின் இடையில் பிரபல கோயில் தலங்களுக்கு சென்று வழிபட்டார். ஆனால் நேரு-காந்தி குடும்ப வாரிசுகளின் இந்து மதத்தின் நிலையான ஈடுபாடு கவனிக்கப்படாமல் போனது என்று கூறப்படுகிறது.
2014 மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததில் இருந்தே, பா.ஜ.கவின் இந்துத்துவா தூண்டலுக்கும் கட்சியின் மீதான இஸ்லாமிய கருத்தை எதிர்கொள்வதிலும் காங்கிரஸ் பெரும் முயற்சி செய்து வருகிறது. 2018-ம் ஆண்டில் காங்கிரஸ் ஒரு "முஸ்லீம் கட்சி" என்று பா.ஜ.கவினர் மக்களை நம்ப வைக்க முடிந்ததை பற்றி சோனியா காந்தியே சுட்டிக்காட்டினார்.
சில ஆண்டுகளாகவே, ராகுல் கோவில்களுக்குச் சென்று இந்து மதத்தைப் பற்றி சுருக்கமாகப் பேசி வருகிறார். உதாரணமாக, ஜனவரி 2017-ம் ஆண்டு, சிவபெருமான், குருநானக், புத்தர், மகாவீரர் மற்றும் ஹஸ்ரத் அலி ஆகியோரின் உருவங்களில் காங்கிரஸின் கை சின்னத்தைக் கண்டறிவது பற்றி அவர் பேசினார். கட்சியின் தேர்தல் சின்னத்தை கடவுள்கள் மற்றும் புனிதர்களுடன் தொடர்புபடுத்துவதாக கூறி ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார் அளித்தது.
சில மாதங்களுக்கு முன் உபநிடதங்கள் மற்றும் கீதையைப் படிப்பதாக ராகுல் கூறினார். குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ராகுல் தன்னை ஒரு "சிவ பக்தர்" என்று கூறினார். பா.ஜ.க பகவான் ராமரைச் சுற்றி செய்யும் அரசியல் பிரச்சாரங்களில் இருந்து வேறுபட்டது. யாத்திரையின் போது குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு ராகுல் சென்று வந்தார். அப்போது பார்வையாளர்கள் புத்தகத்தில் அவரது பெயர் இந்து அல்லாதவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது சர்ச்சையானது. இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் “ஒரு ஜானேயு -தாரி என்று கூறியது . புனித நூல் அணியும் இந்து என்று கூறியது.
2018-ம் ஆண்டு ராகுல் புகழ்பெற்ற கைலாஷ் மானசரோவர் கோயிலுக்கு சென்று வந்தார். 2021-ம் ஆண்டு ராகுல் "இந்து மதம்" மற்றும் "இந்துத்துவம்" ஆகியவற்றிக்கான வேறுபாட்டை கூறி பா.ஜ.கவை தாக்கினார். இந்துத்துத்தை போலல்லாமல் இந்து மதம் தனிநபர்களைக் கொல்வது அல்ல என்று கூறினார்.
அந்த ஆண்டு டிசம்பரில் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு பேரணியிலும் இதை அவர் எடுத்துச் சொன்னார், தான் ஒரு "இந்து" என்று இந்துத்வவாதி அல்ல என்றும் பேசினார். இரண்டும் முற்றிலும் வேறுபட்டது. இரண்டு வார்த்தைகளும் "முற்றிலும் வேறுபட்ட" அர்த்தங்களை கொண்டது என்று கூறினார்.
செப்டம்பரில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை நடைப்பயணத்தில் ராகுல் பல்வேறு கோயில் தலங்களுக்கு சென்றார். அது தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார். மிகவும் கூர்மையான மற்றும் தெளிவான கருத்துகளைப் பதிவு செய்தார். பா.ஜ.கவிற்கு வாக்களித்த அனைவரும் தீவிர இந்துத்வாவாதிகள் அல்ல. இவர்களை ஈர்க்க முடியும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
2017-ம் ஆண்டில், காங்கிரஸின் கை சின்னத்தை கூகுள் செய்ததைப் பற்றியும், "அஜீப் சி பாத் " (விசித்திரமான விஷயம்) ஒன்றைக் கண்டுபிடிப்பதைப் பற்றியும் ராகுல் பேசினார். அதில், இதற்கு முன் நான் இதைப் பார்த்ததில்லை. எல்லா மதத்திலும் கையை பார்க்கலாம் என்றார். அண்மையில் ராகுல் காந்தி சீதா குறித்து பேசி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்யை கேள்வி எழுப்பினார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஏன் ஜெய் சீதா ராம் சொல்வதில்லை. ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் சொல்கின்றனர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் சீதா மற்றும் பெண்களுக்கு இடமில்லை என்பது தான் பொருள் என்றார்.
ராகுல் கூறுகையில், கீதை, உபநிடதங்கள் படித்தேன். அதில் இந்துக்கள் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும் என்று நான் படிக்கவில்லை. இந்து மதம் என்பது சுயத்தைப் புரிந்துகொள்வது, பணிவு மற்றும் இரக்கம் பற்றியது. ராமர் கூட ராவணன் மீது இரக்கத்தை உணர்ந்தார். ராவணன் இறக்கும் போதும் ராமர் மென்மையாகவும், அன்பாகவும், பாசமாகவும் இருந்தார்.
யாத்திரையின் இறுதியில் ராகுலின் வெளிப்புறத் தோற்றமும் மாறிவிட்டது. துறவியைப் போன்ற தாடி, வெறும் டி-ஷர்ட் "நான் ராகுல் காந்தியைக் கொன்றேன்" என்று அவர் கூறியது என அனைத்தும் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. கட்சித் தலைவர்கள் உண்மையில் அவரை "தபஸ்வி" என்று அழைக்கின்றனர். அதே நேரத்தில் பா.ஜ.க - ஆர்எஸ்எஸ்ஸின் பூஜை (பிரார்த்தனை) போலல்லாமல் , ராகுல் காங்கிரஸை "தபஸ்யாவின் சங்கதன் (அமைப்பு)" என்று அழைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.