Advertisment

முக்கியப் பொறுப்புகளில் ராகுல் டீம்: காங்கிரஸில் அதிரடி மாற்றம்!

மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
முக்கியப் பொறுப்புகளில் ராகுல் டீம்: காங்கிரஸில் அதிரடி மாற்றம்!

Latest News Live Updates

 Manoj C G

Advertisment

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை கட்சிக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இளம் தலைவர்கள் நிறைய பேருக்கு காங்கிரஸ் செயலகத்தில் இடம் அளிக்கப்பட்டது. அதே போன்று செயற்குழுவில் பழைய தலைவர்களின் நிலையும் உறுதி செய்யப்பட்டது.

வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்காவிற்கு செல்ல இருப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கட்சியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கடிதம் எழுதிய 23 தலைவர்களுக்கு நேர்மறையான சமிக்ஞைகளையும் அவர் அனுப்பியுள்ளார். அவர்களில் சிலருக்கு கமிட்டியில் தனக்கு உதவும் பொறுப்பினையும், உட்கட்சி தேர்தல் நடத்த சிலரையும் நியமித்துள்ளார். செண்ட்ரல் எலெக்சன் அத்தாரிட்டியை அறிவிப்பதுடன், கட்சியில் விரைவில் தலைவருக்கான தேர்தல் நடைபெறலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏ.கே. அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு அடுத்த அமர்வு வரை செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்த குழு நிரந்தரமானது அல்ல. காங்கிரஸ் கட்சியின் சறுக்கல்களையும், அதற்கு தேவைப்படும் மாற்றத்தையும் எழுதி கையெழுத்திட்ட 23 தலைவர்களில் வாஸ்னிக்கும் ஒருவர்.

மாற்றங்களில் சில முக்கியமானவை : சில தலைவர்களை பொறுப்புகளில் இருந்தும், பொதுச்செயலாளர் பதவிகளில் இருந்தும் நீக்குதல். புதுமுகங்கள் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான பலரை ஏ.ஐ.சி.சி. செயலகத்தில் முக்கிய பணி வழங்குதல். நிறைய புதிய முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டியின் நிரந்த்ர உறுப்பினர்களாக அவர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றி அமைக்கப்பட்ட தேர்தல் அத்தாரிட்டி குழுவிலும் ராகுலின் முத்திரை உள்ளது. மதுசூதன் மிஸ்த்ரி இதன் தலைவராக உள்ளார். ராஜேஷ் மிஸ்ரா, கிருஷ்ண்டா பைரே கௌடா, எஸ். ஜோதிமணி, அர்விந்தர் சிங் லவ்லி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கௌடாவும் ஜோதிமணியும் ராகுலின் விசுவாசிகளாக கருதப்படுகிறார்கள். கையெழுத்திட்ட 23 தலைவர்களில் லவ்லியும் ஒருவர்.

குலாம் நபி ஆசாத், மோதிலால் வோரா, அம்பிகா சோனி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் லுய்சின்ஹோ ஃபலெய்ரோ பொது செயலாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆசாத் ஹரியானாவின் பொதுச்செயலாளராகவும், சோனி ஜம்மு காஷ்மீர், கார்கே மகாராஷ்ட்ரா, ஃபலெய்ரோ மிசோராம், திரிபுரா, நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மேகலாயாவின் பொது செயலாளாராக இருந்தார்கள். 92 வயதான வோரா நிர்வாகத்தின் பொதுசெயலாளராக இருந்தார்.

மாநிலங்களின் பொறுப்பில் உள்ள நான்கு ஏ.ஐ.சி.சி, தலைவர்களான அனுக்ரஹ் நாராயண் சிங் (உத்தரகண்ட்), ஆஷா குமாரி (பஞ்சாப்), கௌரவ் கோகோய் (மேற்கு வங்கம்) மற்றும் ஆர் சி குந்தியா (தெலுங்கானா) ஆகியோரும் அப்பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கோகோய் சமீபத்தில் மக்களவையில் காங்கிரஸின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆசாத், கார்கே மற்றும் சோனிக்கு மிகவும் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார் சோனியா. சிறப்பு அழைப்பாளராக ப.சிதம்பரம் அழைக்கப்பட்டார். அதே போன்று சத்தீஸ்கரின் அமைச்சர் தம்ராத்வாஜ் சாஹூ, வோரா மற்றும் ஃபலெய்ரோ ஆகியோரும் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.  மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திக்விஜய சிங், ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோரையும் நிரந்தர அழைப்பாளர்களாக அழைத்து வந்துள்ளார் சோனியா காந்தி.

வாஸ்னிக், ஹரிஷ் ராவத், உம்மன் சாண்டி, அஜய் மேக்கன், பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே சி வேணுகோபால் ஆகியோர் பொதுச் செயலாளர்களாக தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்திக்கு நெருக்கமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜிதேந்திர சிங் மற்றும் தாரிக் அன்வர் ஆகியோர் புதிய பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். கர்நாடகாவில் சுர்ஜிவாலா பொறுப்பேற்கிறார். அசாமிற்கு சிங் பொறுப்பேற்கிறார். கேரளா மற்றும் லட்ச தீவுகளுக்கு அன்வர் பொறுப்பேற்கிறார். சுர்ஜெவாலா தொலைத்தொடர்பின் தலைவராக இருந்தார். சிங் ஒடிசாவில் பொறுப்பு வகித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சால் வோராவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார். இளம் தலைவர் ஜிதின் பிரசாதா தேர்தலுக்குட்பட்ட மேற்கு வங்கத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார். மற்றொரு இளம் தலைவர் தினேஷ் குண்டு ராவ் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கோவாவின் பொறுப்பில் இருப்பார். ராகுலின் முக்கிய உறுப்பினராகக் கருதப்படும் மாணிக்கம் தாகூருக்கு தெலுங்கானா பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த எச் கே பாட்டீல், கார்கேவுக்கு பதிலாக மகாராஷ்டிராவின் பொறுப்பாளராக பதவி வகிப்பார். இமாச்சலப் பிரதேசத்தின் புதிய பொறுப்பாளராக ராஜீவ் சுக்லா இருப்பார். டெல்லியைச் சேர்ந்த இளம் தலைவரான தேவேந்தர் யாதவ் உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய பொறுப்பாளராக இருப்பார். விவேக் பன்சால் (ஹரியானா) மனீஷ் சத்ரத் (அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா), பக்த சரண் தாஸ் (மிசோரம் மற்றும் மணிப்பூர்); மற்றும் குல்ஜித் சிங் நாக்ரா (சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுரா) ஆகியோர் புதிதாக பொறுப்பு வகிக்க உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sonia Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment