Advertisment

காங்கிரஸை புதுப்பிக்கும் வரைபடம்: நேரு குடும்பத்தைச் சேராதவர் காங். தலைவர் - பிரசாந்த் கிஷோரின் பவர்பாயிண்ட் லீக்

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைமையிடம், காந்தி அல்லாதவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
காங்கிரஸை புதுப்பிக்கும் வரைபடம்: நேரு குடும்பத்தைச் சேராதவர் காங். தலைவர் - பிரசாந்த் கிஷோரின் பவர்பாயிண்ட் லீக்

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைமையிடம், நேரு குடும்பத்தைச் சேராதவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. இது 85 பக்க விளக்கக் காட்சிகளில் வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் பிரசாந்த் கிஷோர் மற்றும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சி பாதை வரைபடத்தில் சமீபத்திய சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு மத்தியில் பரவியது.

Advertisment

இது குறித்து பிரசாந்த் கிரோரிடம் தொடர்பு கொண்டபோது, ​​தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் “இது ஒரு பழைய/போலி விளக்கக்காட்சி, இது நடந்து கொண்டிருக்கும் விவாதத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சி இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் கூறுகையில், “அத்தகைய விளக்கக்காட்சியை நாங்கள் பார்க்கவில்லை” என்று கூறினார். மற்றொரு தலைவர், “இது பழைய விளக்கக் காட்சியாக இருக்கலாம் அல்லது போலியாக இருக்கலாம்” என்று கூறினார்.

நடராஜரை குறிப்பிட்டுள்ளதன் மூலம், படைத்தல், காத்தல், விடுதலை, அழித்தல், மறைத்தல் மற்றும் இணைப்பு ஆகியவற்றின் அடையாளங்களை அது குறிப்பிடுகிறது.

இதுமட்டுமில்லாமல் அது ஐந்து வியூக உத்தி முடிவுகளை எடுக்க வேண்டும்: தலைமைப் பிரச்சினையை சரிசெய்தல்; கூட்டணி புதிரைத் தீர்க்க வேண்டும்; கட்சியின் ஸ்தாபக கொள்கைகளை மீட்டெடுக்க வேண்டும்; அடிமட்ட தலைவர்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்களின் படையை உருவாக்க வேண்டும்; மற்றும் ஆதரவு ஊடகம் மற்றும் டிஜிட்டல் பிரச்சாரச் சூழலை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

காங்கிரச் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தி இந்தியன் எக்ச்பிரஸிடம் கூறுகையில், “இது கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைமைக்கு கிஷோர் அளித்த விளக்கக்காட்சி என்றும், அவருடைய தற்போதைய விளக்கக்காட்சி பல சேர்த்தல்கள் மற்றும் சில நீக்குதல்களுடன் இருப்பதாகவும் கூறினார். மேலும், “காந்தி அல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்பது போல அதில் எதுவும் இல்லை” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பல காங்கிரஸ் தலைவர்கள், பிரசாந்த் கிஷோர் தனிப்பட்ட உரையாடல்களில், காந்தி அல்லாத ஒருவரை காங்கிரஸ் தலைவராகவும், ராகுல் காந்தியை மக்களவைத் தலைவராகவும் முன்வைத்ததாகக் கூறினர்.

காங்கிரஸ் கட்சி 1985 ஆம் ஆண்டிலிருந்து எப்படி நிரந்தர வீழ்ச்சியில் உள்ளது என்பதை பழைய விளக்கக்காட்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கான நான்கு காரணங்களை அது அடையாளம் காண்கிறது: வாரிசுகள் பதவியில் இருப்பதனால் ஏற்படும் தீமை; ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன எதிர்ப்பின் நான்கு காலகட்டங்கள் (ஜேபி இயக்கம், போஃபர்ஸ் ஊழல், அதன் பின்விளைவுகள், மண்டல் போராட்டம், ராமர் கோயில் இயக்கங்கள், ஊழல் மற்றும் மோடியின் எழுச்சிக்கு எதிரான இந்தியா); வாரிசு அரசியல் பெருமையை அயன்படுத்துவதில் தோல்வி, சாதனைகள், கட்டமைப்பு பலவீனங்கள் மற்றும் வெகுஜனங்களுடனான தொடர்பு இல்லாமை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு எப்படி சோர்வடைந்த வயதான தலைமை உள்ளது என்றும் கடந்த 25 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட பான்-இந்திய உறுப்பினர் இயக்கத்தை மேற்கொள்ளவில்லை என்று அந்த விளக்கக் காட்சி கூறுகிறது. காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமையின் 118 பேரில் 23 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 66 உறுப்பினர்களில் இருவர் மட்டுமே 45 வயதிற்குட்பட்டவர்கள் என்பதை குறிப்பிடுகிறது.

தற்போது உள்ள அகில இந்திய காங்கிரச் கமிட்டி பிரதிநிதிகளில் 72 சதவீதம் பேர், மாவட்ட மற்றும் தொகுதி தலைவர்கள், இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி, 2014 முதல் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தையோ அல்லது போராட்டத்தையோ நடத்தவில்லை என்று கூறுகிறது. 1990-இல் ராஜீவ் காந்தியால் மேற்கொள்ளப்பட்ட பாரத யாத்திரைதான் காங்கிரஸ் கட்சியின் கடைசி வெகுஜன மக்கள் பிரச்சாரம் என்று கூறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் சிக்கலை சரிசெய்ய, விளக்கக்காட்சி இரண்டு மாதிரிகளை பரிந்துரைக்கிறது. கட்சித் தலைவராக சோனியா காந்தியும், நாடாளுமன்றத்தின் தலைவராக ராகுல் காந்தியும், பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியும் காந்தி அல்லாத ஒருவர் செயல் தலைவர் அல்லது துணைத் தலைவராகவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும் தொடர்வது விருப்பமானதாக இருக்கும் என்று கூறுகிறது.

இந்த மாதிரி மிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆனால் மிதமான தாக்கம் நம்பகத்தன்மை கொண்டது என்றும் விளக்கக்காட்சி கூறுகிறது. தற்செயலாக, ஜி-23 தலைவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று நாடாளுமன்ற வாரியத்தை புதுப்பிக்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத ஒரு தலைவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக்க வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தது சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

காந்தி அல்லாதவர் காங்கிரஸ் தலைவராகவும், சோனியாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராகவும், ராகுல் காந்தியை நாடளுமன்ற வாரியத் தலைவராகவும், பிரியங்கா காந்தியை பொதுச் செயலாளர் ஒருங்கிணைப்பாளராகவும் மாற்று மாதிரி, விளக்கக்காட்சி தெரிவிக்கிறது. இந்த மாதிரி, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment