Advertisment

நீங்கதான் அடுத்த முதல் அமைச்சர்.. அஜித் பவாரை வைத்து சரத் பவாரை இழுக்கும் பா.ஜ.க: காங்கிரஸ் குற்றச்சாட்டு

முதல் அமைச்சர் பொறுப்பு வேண்டும் என்றால் சரத் பவாரை பாஜக கூட்டணிக்கு கொண்டுவர வேண்டும் என பாஜக நிபந்தனை விதிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனை தேசியவாத காங்கிரஸ் மறுத்துள்ளது.

author-image
WebDesk
Aug 16, 2023 23:06 IST
Congress says BJP wants Ajit Pawar to rope in Sharad Pawar no clue says Supriya Sule

தேசியவாத காங்கிரஸ் நிறுவனத் தலைவர் சரத் பவார்

“அஜித் பவாரின் முதல்வர் கனவு நனவாக வேண்டுமென்றால், சரத் பவாரை தங்கள் பக்கம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அஜித் பவாரிடம் கூறியுள்ளார். அதனால்தான் அஜித் பவார் சரத் பவாரை மீண்டும் மீண்டும் சந்தித்து கோரிக்கை விடுப்பதாகத் தெரிகிறது” என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்தக் கருத்து மாநில அரசியலில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் சுப்ரியா சுலே கூறினார். தொடர்ந்து, இதனை சிவசேனா கட்சியும் மறுத்துள்ளது.

மேலும் இது தொடர்பாக சுப்ரியா சுலே, “இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது; நான் எனது பணிகளில் பிஸியாக உள்ளேன்.

சரத் பவார் இதுபோன்ற யூகங்களுக்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டார். அவர் சுதந்திரமானவர். தன்னைத் தானே அவருக்கு காத்துக்கொள்ள தெரியும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, “பாரதிய ஜனதா சலுகைகள் அளித்தது உண்மைதானா? இந்தச் சலுகைகள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறதா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்கு சுப்ரியா சுலே, “எனக்கு எந்தச் சலுகைகளும் கிடைக்கவில்லை. நான் அலட்சியமாக பார்க்கிறேன்” என்றார்.

இதையடுத்து, பாஜக வாய்ப்பு வழங்கினால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என கேட்டதற்கு, “நான் கற்பனையான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை; நான் நிஜவாழ்வில் இருக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரான சுனில் தட்கரே, “இது கேலிககுரியது. பாஜக உடன் தேசியம், மாநில நலனுக்காக கைகோர்த்துள்ளோம்.

நாங்கள் எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை. மாநிலத்தின் வளர்ச்சி ஒன்றே குறிக்கோள்” என்றார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் பிரித்விராஜ் சௌகான், “சில நாட்களுக்கு முன்பு, சரத் பவாருக்கு பிஜேபி கேபினட் அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்ததாக நான் கூறியிருந்தேன். இது எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த தகவல். எனினும் இது சரியானதுதான்” என்றார்.

இதற்கிடையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி சஞ்சய் ராவத், “சரத் பவாருக்கு வாய்ப்பு அளிக்க அஜித் பவார் யார்? அவர் எந்த வாய்ப்பையும் ஏற்க துணிய மாட்டார்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Maharashtra #Ncp #Sharad Pawar #Congress Vs Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment