All-india-congress | bjp | Election Commission | amit-shah: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் சட்டபேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் நேற்று புதன்கிழமை தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளது.
அந்த புகாரில், எதிர்வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் பிரச்சாரம் செய்வதிலிருந்து 'தெளிவான மற்றும் முழுமையான' தடையைக் கோரியுள்ளது. மேலும், பா.ஜ.க-வின் சாதனைகளைக் கூறி வாக்குசேகரிக்க வருடாந்திர விடுப்பில் உள்ள ராணுவ வீரர்களை ஈடுபடுத்துவதை தடுக்கவும், 'மாவட்ட ரத் பிரபாரிகள்' எனும் யாத்திரைக்கு அரசு அதிகாரிகளை பயன்படுத்த முயற்சிக்கும் நரேந்திர மோடி அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எதிராக காங்கிரஸின் புகார் அவர்களின் தேர்தல் பிரச்சார பேச்சுகளுடன் தொடர்புடையது. இம்மாத தொடக்கத்தில் சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கானில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, ஆகஸ்ட் மாதம் பெமேதரா மாவட்டத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில் புனேஷ்வர் சாஹு ஒருவர் இறந்ததைக் குறிப்பிட்டார். தற்போது அவரது தந்தை ஈஸ்வர் சாஹுவை பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் "அமைதிப்படுத்தல் மற்றும் வாக்கு வங்கி அரசியல்" புனேஷ்வர் படுகொலைக்கு வழிவகுத்தது என்று குற்றம் சாட்டிய அமித் ஷா, "குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய பா.ஜ.க முடிவு செய்துள்ளது. அதன் அடையாளமாக அவரது தந்தை ஈஸ்வருக்கு நாங்கள் சீட் வழங்கியுள்ளோம்." என்று கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: In complaints to EC, Congress seeks campaign ban on Amit Shah, Himanta Sarma; action on ‘rath prabhari’ row
“அமித் ஷாவின் பேச்சு எந்தவொரு வகுப்பினரையும் அல்லது நபர்களின் சமூகத்தையும் மற்றொரு வகுப்பினர் அல்லது சமூகத்திற்கு எதிராக ஏதேனும் குற்றத்தைச் செய்யத் தூண்டும் இதனால் அவர் இந்திய தண்டைச் சட்டம் இன் பிரிவு 505 மற்றும் பிற விதிகளின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். அமித் ஷா வின் வகுப்புவாத குற்றச்சாட்டுகள் பொதுமக்களை அமைதியை சீர்குலைக்க தூண்டுவதையும், மதத்தின் பெயரால் மறைமுகமாக வாக்குகளை தேடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளை மீறுகிறது” என்று காங்கிரஸ் தனது புகாரில் குற்றம் சாட்டியது.
அமித் ஷாவின் பேச்சு மாதிரி நடத்தை விதிகளின் (எம்.சி.சி) பல்வேறு விதிகளை மீறுவதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ், தேர்தல் முடியும் வரை அமித் ஷாவின் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளிலிருந்தும் தெளிவான மற்றும் முழுமையான தடையை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டது. பேரணியின் வீடியோக்களைப் புண்படுத்தும் பகுதிகளுடன் பரப்புவதைத் தடைசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
சத்தீஸ்கர் காங்கிரஸ் எம்.எல்.ஏ முகமது அக்பருக்கு எதிராக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறிய கருத்துக்கு இதேபோன்று தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. கவர்தாவில் நடந்த பேரணியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாக காங்கிரஸ் தனது புகாரில், “ஒரு அக்பர் ஒரு இடத்திற்கு வந்தால், 100 அக்பர்களை அழைக்கிறார். எனவே, அவரை சீக்கிரம் அனுப்புங்கள், இல்லையெனில் மாதா கௌசல்யாவின் நிலம் மாசுபடும்” என்று கூறியுள்ளது.
மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் மாணிக்கராவ் தாக்ரே, தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, மக்களவை எம்.பி உத்தம் குமார் ரெட்டி, தெலுங்கானா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பாட்டி விக்ரமார்கா ஆகியோர் அடங்கிய காங்கிரஸ் குழுவும் தேர்தல் ஆணையத்தை சந்தித்துள்ளது. "விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா"-விற்கு மாவட்ட "ரத் பிரபாரிகள்" (சிறப்பு அதிகாரிகள்) என இணை செயலாளர், இயக்குனர் மற்றும் துணை செயலாளர் பதவிகளில் உள்ள அதிகாரிகளை நியமிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
வேளாண் செயலாளரின் உள் உத்தரவின்படி, நவம்பர் 20 முதல் ஜனவரி 25 வரை நாடு முழுவதும் நடத்தப்படும் யாத்திரை - மோடி அரசாங்கத்தின் சாதனைகளை வெளிப்படுத்தும் நோக்கமாக இருக்கும். நாட்டில் உள்ள 765 மாவட்டங்களில் 2.69 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் முந்தைய உத்தரவுக்கு, ஆண்டு விடுமுறையில் இருக்கும் ராணுவ வீரர்களை, அரசாங்கத் திட்டங்களை ஊக்குவிப்பதில் நேரத்தைச் செலவிடும்படி, அவர்களை "சிப்பாய்-தூதர்கள்" ஆக்குவதற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
"முதலாவதாக, இது தெளிவாக அரசாங்கத்தின் முன்முயற்சியாக மறைக்கப்பட்ட ஒரு அரசியல் பிரச்சாரம். பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்கத் திட்டங்களை மட்டும் விளம்பரப்படுத்துவதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நம்பத்தகுந்த விளக்கம் எதுவும் இல்லை” என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகள் எம்.சி.சி-யை மீறுவதாகவும், ஆளும் கட்சியின் சேவையில் அரசு இயந்திரத்தை மொத்தமாக தவறாக பயன்படுத்துவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் தெலுங்கானா அரசு, ரைது பந்து திட்டத்தின் பயனாளிகளுக்கு இந்த ஆண்டின் இரண்டாம் பயிர்க்கான தொகையை இன்னும் வழங்கவில்லை என்றும், தேர்தல் குழுவை வழிநடத்துமாறும் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு அல்லது வாக்குப்பதிவுக்குப் பிறகு பல்வேறு திட்டங்களின் கீழ் பலன்கள் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
“உத்தேசிக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணத்தை மாற்றுவதை நாங்கள் எந்த வகையிலும் எதிர்க்கவில்லை என்றாலும், மாதிரி நடத்தை விதிகள், நியாயமான தேர்தல்களின் நெறிமுறைகளை நிலைநிறுத்துவதற்காகவும், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்காகவும், தொகை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நவம்பர் 3 ஆம் தேதி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் தேதிக்கு முன் அல்லது நவம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவுக்குப் பிறகு இரண்டாவது பயிர் செய்ய வேண்டும்" என்றுகாங்கிரஸ் கட்சியின் குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் காவல்துறை அதிகாரிகளை "சட்டவிரோதமாக" இடமாற்றம் செய்ததையும், தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு காங்கிரஸ் கொண்டுவந்ததுள்ளது. தேர்தல் ஆணையம் அவர்களின் பதவிக்காலத்தின் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்யாமல், "குறிப்பிட்ட அரசியலை பகிரங்கமாக ஆதரிக்கும் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் பணியை ஒதுக்கி இருந்தது.
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள சுர்கி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் கோவிந்த் சிங் ராஜ்புத், அதிகபட்ச வாக்குகள் பெறும் பூத்களில் உள்ள ஏஜெண்டுகளுக்கு ரூ. 25 லட்சம் கொடுப்பதாகக் கூறியதற்காக அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரது கருத்துக்கள் "லஞ்சம் கொடுப்பது". எனவே இது ஒரு "ஊழல் நடைமுறை", இது எம்.சி.சி-யை மீறுவதாகும் என்று காங்கிரஸ் அதன் புகாரில் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.